வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஞானம் தந்த ஞானானந்தர்

ஞானானந்தகிரி சுவாமிகளைத் தெரிந்தவர்கள் அசைபோடவும், தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு ஏற்ற நூலாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 2:36 pm

DIN

ஞானம் தந்த ஞானானந்தர்- நல்லி குப்புசாமி செட்டியார் ; பக்.160; ரூ.175; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; ✆98410 36446.

பட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் நல்லி குப்புசாமி செட்டியார் எழுத்துத் துறையிலும் ஈடுபட்டு வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் போன்ற தலைப்பில் நூல்களையும் படைத்து வருகிறார். அந்த வகையில், திருக்கோவிலூர் தபோவனம் ஞானாந்தகிரி சுவாமிகளைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. முதல் பகுதி ஞானானந்தர் பிறந்த வட கர்நாடகப் பகுதியான சுப்ரமண்யாவுக்கு அருகிலுள்ள மங்களபுரியில் பிறந்த சுவாமிகளின் பிறப்பு, வளர்ப்பு, பூர்வாங்க குருவான ஸ்ரீசிவரத்னகிரி சுவாமிகளைச் சந்தித்தது, ஞானம் பெற்றது, இந்தியாவிலுள்ள திவ்ய தேசங்களுக்குச் சென்றது, இலங்கை சென்றது, இந்தியா திரும்பியது, இறுதியில் திருக்கோவிலூரில் தபோவனம் ஏற்படுத்தியது, கல்லக்குடி, ஆட்டையாம்பட்டி, சூலூர், ஸ்ரீமுஷ்ணம், அனுக்கூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஊர்களில் தங்கி இருந்தது வரை கூறுகிறது.

இரண்டாம் பகுதி அவரது உபதேசங்களில் முக்கியமான 108 உபதேசங்களைப் பட்டியலிட்டு, அதற்கேற்ற விளக்கங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றில் மற்ற மகான்களிடமிருந்து எவ்வாறு அவர் வித்தியாசப்படுகிறார் என்பதை ஆசை அடக்குதல், ஓம் என்றால், அதிகாலை தியானம், கோபுர தரிசனம், மூவகைத் துறவு ஆகியவற்றுக்கு அளித்த விளக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஞானானந்தகிரி சுவாமிகளைத் தெரிந்தவர்கள் அசைபோடவும், தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு ஏற்ற நூலாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.