ஆறும் ஊரும்

ஆறுகள் தொடர்பான அறிவார்ந்த கட்டுரைகள் மட்டும் அல்லாமல், ஆறுகள் தொடர்பான அவருடைய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
ஆறும் ஊரும்
Updated on
2 min read

ஆறும் ஊரும் - பூமி ஞானசூரியன்; பக்.252; ரூ.300 ; எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ், தெக்குப்பட்டு அஞ்சல், திருப்பத்தூர் மாவட்டம்; ✆852619370.

தமிழகத்தில் ஓடுகிற நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூல் என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் உலக ஆறுகளைப் பற்றியும் இந்நூலில் கட்டுரைகள் உள்ளன. தமிழகத்தில் ஓடும் நூறு ஆறுகள் பற்றிய வரலாறு இந்நூலின் தனிச்சிறப்பு. ஆறு தோன்றுமிடம், ஆற்றில் உள்ள தடுப்பணைகள், அந்த ஆற்றினால் பயனடையும் பகுதிகள், அந்த ஆற்றில் உள்ள தனிச்சிறப்பான வளங்கள், ஆறு நிறைவடையும் இடம், ஆற்றின் கிளையாறுகள் என ஒரு குறிப்பிட்ட ஆறு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூல் சுவைபடக் கூறுகிறது. மூன்று இறந்து போன ஆறுகள் என்ற கட்டுரையில் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் ஆறு தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த ஆறுகளை உயிர்ப்பிக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையும் இடம் பெற்று இருக்கிறது. ஆறுகள் சீரழிந்து போனதைக் குறித்து மிகவும் கவலைப்படும் நூலாசிரியரின் வேதனைகள், நூலை வாசிக்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஆறுகளாக உருவாகி, இறுதியில் சாக்கடையாக முடிகிற பல ஆறுகளின் அவலநிலையைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

தேம்ஸ் நதி கூட ஒரு காலத்தில் 'லண்டன் கூவமாகத்தான்' இருந்தது. அதைத் தூய்மையாக்கவில்லையா? என்று கேட்கும் நூலாசிரியர், ஆறுகளுக்கு உரிய பகுதிகளை ஆக்கிரமிப்பது, ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகளை கலப்பது, வீட்டுக் கழிவுகளை ஆற்றுக்குள் விடுவது, ஆறுகளின் கரைகளை கழிப்பிடமாக மாற்றுவது உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்க வேண்டும்; தடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com