மேன்மை கொள்
ஒவ்வொரு தனி மனிதரையும் நல்லன எண்ணி, நல்லன செய்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பங்களிப்பை நல்கி சாதனை படைக்கத் தூண்டும் கட்டுரைகளைக் கொண்ட நூல்.

மேன்மை கொள்; சோம.வள்ளியப்பன்; பக்.168, ரூ. 190; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆044-42009603.

'பெரிதாய் நினை' என்ற தலைப்பில் தொடங்கி 'ஒரு பைனான்ஷியல் மெனு' என்ற தலைப்பு வரையிலான 34 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் நாம் தினசரி வாழ்வில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு கருத்தை உள்ளடக்கியிருக்கிறது. 'கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது' என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி, அடைந்துவிட்டாலும் இலக்கு சிறியதென்றால் பெருமை இல்லை; தவறவிட்டாலும் முயன்றது பெரிய இலக்கு என்றால் அது பெருமைக்குரியது என்று விளக்கி 'பெரிதாய் நினை' என சிந்திக்க வைக்கிறார் நூலாசிரியர்.
காத்திருக்கும் நேரங்களில் கைப்பேசியில் தேவையில்லாத மெசேஜ்களை அழிக்கலாம் என நேர மேலாண்மை கட்டுரையில் சொல்லும் யோசனை அசர வைக்கிறது. எல்லா வேலைகளுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்கிற தகவல் நமக்கு செய்தி சொல்கிறது. கருத்துப் பரிமாற்றத்துக்கு தேவை, தெளிவான பதில்கள், சபை அறிந்து பேசுதல் என ஏராளமான தகவல்கள்.
அறிவுரைகளை அள்ளி வழங்காமல் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து கருத்துகளைக் கையாண்டு சொல்ல வந்த கருத்துகளை சுருக்கமாக, நறுக்காக தந்திருப்பதன்மூலம் வழக்கமான சுய முன்னேற்ற நூல்கள் வரிசையில் இருந்து வித்தியாசப்படுகிறது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...