சங்க கால மறவர்
மறவர் பழக்க வழக்கங்கள் பற்றிய இயலில் மணவினைகளை மங்கள மகளிரே ஏற்று நடத்தியது தெரிய வருகிறது.

சங்க கால மறவர் - டாக்டர் சு. முத்தையா; பக்.156; ரூ. 180; காவ்யா, சென்னை - 24; 044-2372 6882.
மறவர் பற்றிய ஆய்வு நூல்கள் பல இருந்தாலும், சங்க கால மறவர் பற்றிய விரிவான தனித்ததொரு நூல் இல்லை என்ற குறையை ஓரளவு தீர்க்கக் கூடிய நூலாக இது உள்ளது. இந்த நூலில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்து தரவுகளும் தகவல்களும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மறம் என்ற சொல்லுக்கான பொருளில் தொடங்கும் நூலில் மறப்புகழ், மறப்போர், மறப்படை, மறக்கற்பு என மேலும் பல சொற்களும் தொடர்களும் ஆராயப்படுகின்றன.
கள்ளர், மறவர், அகம்படியார் என்ற மூவகையினரை சிவபாதசுந்தனாரை மேற்கோள் காட்டி விளக்கும் ஆசிரியர், மூவருக்கும் வீரம் பொதுப்பண்பு, தொழில் காவல் என்கிறார்.
பாலைநில மறவர், மறக்குடி மறவர், போர் மறவர் என மூவகை மறவரைப் பற்றி விவரிக்கும் இந்நூல், மறவரும் மழவரும் ஓர் இனத்தவரே என்றும், இருவரும் வேறுபடும் இடம் பற்றியும் விளக்குகிறது.
மறவர் குடும்பம் பற்றிய இயலில் மணமுடித்தவர்கள் தனி வாழ்க்கை மேற்கொண்டதைக் குறிப்பிடுவதுடன், மன்னர் ஆணையை நிறைவேற்றுவதும், மக்களின் துயர்நீக்குவதுமே மறவர் குடும்பங்களின் கொள்கையும் குறிக்கோளுமாக இருந்தன என்கிறார் நூலாசிரியர்.
மறவரும் சமுதாயமும் பற்றிக் கூறும்போது, செருக்கள ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் வீரர்களின் இரவு ஓய்வின்போது, காவல் பணி புரியும் பெண்கள் பற்றியும், மறவர் பெற்ற பட்டங்களும் காட்டப்பட்டுள்ளன.
மறவர் பழக்க வழக்கங்கள் பற்றிய இயலில் மணவினைகளை மங்கள மகளிரே ஏற்று நடத்தியது தெரிய வருகிறது. விரிவான நூலொன்றை எழுதத் தேவையான ஏராளமான தகவல்கள் நிரம்பிய இந்த நூல், மறவர்களைப் பற்றி மட்டுமின்றி, சங்க கால வாழ்வையும் வாசகர்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...