வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழக அரசியல் கட்சிகள்

அரசியல் விமர்சன எழுத்தில் இந்தப் புத்தகம் ஒரு காலப் பெட்டகம்!

News image
Updated On :24 டிசம்பர் 2024, 11:09 am

DIN

தமிழக அரசியல் கட்சிகள் - சோ; பக்.112; ரூ.85; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 600004; 044-2464 1314.

தமிழக அரசியல் விமர்சனத்தில் தனக்கென தனி பார்வை, தனி எழுத்துப் பாணி கொண்டு அரை நூற்றாண்டு காலம் ஆழமான முத்திரை பதித்தவர் சோ. அவருடைய 8 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

'தமிழகத்தின் ஆட்சியும் அரசியலும்', 'காங்கிரஸýக்கு ஏன் இந்த கதி?', 'கட்சிகளின் கனவுகளும் கணக்குகளும்' உள்ளிட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான நடையில் எழுதப்பட்டுள்ளன.

கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் சோவின் கூர்மையான அரசியல் பார்வை வெளிப்படுகிறது. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் அரசியல்வாதி கூட, நையாண்டியும் குத்தலும் நிறைந்த அவரது எழுத்தில் வெகுண்டுவிடாமல், ரசித்து விடும்படி எழுதும் திறன் படைத்தவர் சோ.

பத்தாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட இந்த கட்டுரைகளை, பல ஆண்டுகள் கடந்து இப்போது படிக்கும்போதும் அவற்றில் உள்ள தெளிவு, தீர்க்க தரிசனம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பற்றி 1992-இல் இவ்வாறு எழுதுகிறார்: 'எப்போதுமே தங்களுடைய பலத்தை நம்புவதை விட மற்றவர்களின் பலவீனத்தை நம்பித்தான் கட்சி நடக்கிறது.

இன்றைய (1992) நிலையும் அதுதான்... மற்ற கட்சிகளுக்குப் பெரிய வளர்ச்சி இல்லாததால் இப்போதும் கூட பல மாநிலங்களிலும் கணிசமான வாக்கு இருக்கிறது... பாஜகவை மற்றவர்கள் ஒதுக்குவார்கள்; அதனால் காங்கிரஸ் எதிர்ப்பு சிதறும். இதனால் காங்கிரஸýக்கு மற்றவர்களை விட வாய்ப்பு அதிகம்... இது வருங்காலம் பற்றிய காங்கிரஸின் நம்பிக்கை.' 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட பிறகும் காங்கிரஸ் நிலை அப்படியே தொடர்ந்து, அவருடைய எழுத்து மெய்யாகவே உள்ளது தெரிகிறது.

1992-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சூழலில் பாஜக குறித்து சோ எழுதியவை இன்று உண்மையாகிவிட்டது. 2000-இல் எழுதப்பட்ட 'முதல்வர் கருணாநிதி - ஒரு பார்வை' என்னும் கட்டுரை, அத்தலைவரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமாகவே அமைந்திருக்கிறது. அரசியல் விமர்சன எழுத்தில் இந்தப் புத்தகம் ஒரு காலப் பெட்டகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.