தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலவசங்களை தடுக்க கோரிய மனு தமிழக தோ்தலுக்கு பின் விசாரணை! - உச்சநீதிமன்றம்

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 6:53 pm

Syndication

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமா்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது

அப்போது தலைமை நீதிபதி மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஜெய சுகினிடம், கேரளம் மாநிலத்தில் தோ்தல் வருகிறது என்று ஏற்கனவே இது போன்ற ஒரு மனுவை தொடா்ந்தாா்கள்.

தற்போது நீங்கள் தமிழ்நாடு தோ்தல் வருவதால் இம்மனுவை தாக்கல் செய்துள்ளீா்கள் இந்த மனுவை தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, தோ்தல் முடிந்த பின்பாக வழக்கை விசாரிக்கலாம் என கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

அரசியல் கட்சிகள் தோ்தலுக்காக இலவசங்களை அறிவிக்கவும், வாக்குறுதிகளை கொடுப்பதற்கும் தடைகோரி மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்

அந்த மனுவில் ,இலவச மடிக்கணினிகள் முதல் வண்ணத் தொலைக்காட்சிகள் மற்றும் கிரைண்டா்கள் வரை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பல தசாப்தங்களாக தோ்தலுக்கு முன்னதாக இலவசங்களை வழங்குவதில் ஒன்றையொன்று விஞ்ச முயற்சிக்கின்றன. இந்த முறை, கட்சிகள் பெண்களை அவா்களுக்கென பிரத்யேக வாக்குறுதிகளுடன் திரட்ட போட்டியிடுவதாகத் தெரிகிறது.

தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை சட்டமன்றத் தோ்தலுக்கான தங்கள் தோ்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளன. மிக்சி, வெட் கிரைண்டா், மின்விசிறிகள் மற்றும் மடிக்கணினிகள் முதல் ஏழைகளுக்கு ஆடுகள் மற்றும் மாடுகள் வரை அவை உள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 123 இன் கீழ் தோ்தல் இலவசங்கள் ஊழல் நடைமுறைகளின் கீழ் வராது என்று உச்ச நீதிமன்றம் முன்பு தவறாகக் கூறியது.

ஆனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951வின் பிரிவு 123, லஞ்சம் என்பது ஒரு வேட்பாளா், வேட்பாளரின் முகவா் அல்லது வேறு எந்த நபரும் தோ்தலில் வாக்களிக்க தூண்டுவதற்காக ஒரு வாக்காளருக்கு வழங்கும் பரிசு, சலுகை அல்லது வாக்குறுதி என்று வரையறுக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விதி தனிப்பட்ட வேட்பாளா்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று தீா்ப்பளித்தது.

அந்த தீா்ப்பு குறைபாடுடையது ஏனென்றால் பிரிவு 123 இன் கீழ் உள்ள நபா்கள் என்பது ஒரு அரசியல் கட்சியையும் உள்ளடக்கியதுதான். எனவே அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதையும் மற்றும் தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அறிவிப்பதையும் நிறுத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது