நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி; பக்.200; ரூ.250; நற்றிணை பதிப்பகம், சென்னை-87; ✆044- 4273 2141.
2023-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல். குடிநாவித சமூகத்தைச் சேர்ந்த காரு என்ற மனிதரின் மரணத்தில் தொடங்கும் நாவல், தனது இரு சகோதரிகளை வளர்க்க மற்றொரு சகோதரியுடன் சேர்ந்து காரு பட்டபாடுகளை வலி நிறைந்த வார்த்தைகளால் விவரிக்கிறது.
காருமாமாவாக அறியப்படும் கதாபாத்திரம் தனது குடிமுறைகளை முற்றாகக் கைவிட்ட பிறகு, தூர்ந்து கிடந்த ஊரில் தனித்திருந்தபோதும், அவரது மரணத்துக்கு வந்து குவித்த பண்ணையக்காரர்களும், உறவுஜனங்களும் காருவின் அர்ப்பணிப்பான வேலைக்கு சாட்சியாக அமைகின்றனர்.
பெரியம்மா கதாபாத்திரமும் தனித்து தெரிகிறது. கருவுற்றிருந்த தன் பண்ணையக்காரிச்சிகளைப் பராமரித்தது போலவே, சூலுற்றிருக்கும் தனது ஆடுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படாமலும் உடல் இளைக்காமலும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டதிலிருந்து பெரியம்மாவின் ஈரநெஞ்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
முத்தையன்வலசுப் பெரியப்பா, லிங்கநாவிதன், காருமாமாவின் மகன் சுந்தரம், பண்ணையக்காரர் கொற்றவேல் கவுண்டர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலின் ஊடே தொடர்ந்து பயணிக்கின்றனர். பெருவாழ்வு வாழ்ந்து தனது மனைவிக்கும், சகோதரிகளுக்கும் பெத்துப் பிறப்புகளுக்கும், சுற்றங்களுக்கும், ஊரின் மற்ற மனிதர்களுக்கும், தனது களங்கமற்ற தீராத அன்பைத் தந்து, மறைந்த மாமனிதராக காருமாமாவைக் கொண்டாடுகிறார் நாவலாசிரியர்.
இந்த நாவலின் மூலமாக, காருமாமாவுக்கு நியாயம் செய்துவிட்டதாக கற்பனை செய்துகொள்ளவில்லை என நாவலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும், எளிய மனிதர்களின் போராட்டமான வாழ்க்கைக்கு உண்மையாகவே நியாயம் செய்கிறது இந்நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...