எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

எல்லாமே அரசியல்

இந்த நூலில் மிகக் கூர்மையான விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.

News image
Updated On :31 ஜூலை 2024, 1:21 pm

DIN

எல்லாமே அரசியல் - துக்ளக் சத்யா; பக்.288; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-127; ✆81480 66645.

தீவிரமான அரசியல் கட்டுரைகள் எழுதுவது ஒரு வகை; அங்கதம் கலந்து எழுதுவது மற்றொரு வகை. இந்த நூலில் மிகக் கூர்மையான விமர்சனங்களை அங்கதம் மூலமாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர்.

2019 முதல் 2021 வரையிலான காலச் சூழ்நிலைகளின் பின்னணியில் எழுதப்பட்ட 57 கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் கட்டுரைகள் மட்டுமின்றி, பிற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பான கட்டுரையில், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீட்டிலும், பொருளாதார அளவுகோலை (கிரீமிலேயர்) நிர்ணயிக்காமல் பார்த்துக் கொண்டு வசதியானவர்களைப் பாதுகாப்பது சமூகநீதிக் கொள்கையை வாழ வைக்கும் செயலா? என நூலாசிரியர் எழுப்பும் கேள்விக்கு சமூக நீதி பேசும் தலைவர்கள் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுடன் பேசுவது போன்ற கற்பனை கட்டுரைகள் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கின்றன.

ஒருநாடு- ஒரு தேர்தல், நீட் தேர்வு, சென்னை மழை வெள்ளம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து நகைச்சுவை குறித்து நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

அரசியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.