பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

இலக்கணம் மாறுதே! சம கால ஆண் பெண் உறவு (கதையும் கட்டுரையும்) - ஜான்சி ஷஹி; பக்.158; ரூ.225; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; 96003 98660.

கவுன்சிலிங், சைக்கோதெரபி, யோகாவில் முதுநிலைப் பட்டம் பெற்ற மன நல ஆலோசகரான நூலாசிரியர் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். எளிய மொழியில், எளிய நடையில் மூன்று பெண்களின் வாழ்வில் நடக்கும் யதார்த்த சம்பவங்களைக் கோத்து இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது வெறும் கதையா என்று படித்துப் பார்க்கும்போது, நம் அருகே இருக்கும் எவருடைய வாழ்க்கையிலோ இது நடந்திருப்பது போன்றே புலப்படுகிறது.

இன்றைய கணினி உலகில் ஆண்கள் - பெண்கள் நட்பை கொச்சைப்படுத்துவோருக்கு இந்த நூல் ஓர் புரிதலை உண்டாக்கும். திருமணம் தாண்டிய உறவுகள் குறித்தும், மற்றவர்கள் மேல் வரும் அவ்வப்போதான ஈர்ப்புகளின் இயற்கைத் தன்மை குறித்தும் இந்த நூல் விரிவாக அலசுகிறது.

இளைய தலைமுறையினர் மேற்கொள்ளும் விவாகரத்துகள், இணையரோடு ஏற்படும் கருத்து வேறுபாடுகள், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் இந்த நூல் தீர்வு கண்டறிய முற்படுகிறது.

சில மனிதர்களின் வாழ்விலாவது சில மாற்றங்கள் ஏற்பட இந்த நூல் கண்டிப்பாக உதவும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. இளைய தலைமுறையினரும், தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களும் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.