மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கலைமகள் தீபாவளி மலர்-2024

கலைமகள் தீபாவளி மலர் பாதுகாத்து படிக்கக்கூடிய மலர் என்று சொன்னால் மிகையில்லை.

News image
Updated On :4 நவம்பர் 2024, 1:38 pm

DIN

கலைமகள் தீபாவளி மலர்-2024; கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்; பக். 224; ரூ.200; சென்னை - 4; ✆044- 2498 1699.

பல்வேறு அம்சங்களுடன் சிரத்தையோடு தயாரிக்கப்பட்ட மலரிது. சிருங்கேரி ஜகத்குரு சங்கராசாரியாரின் அருளுரை சிறப்பு தருகிறது. 'உடையவர்' என்ற தலைப்பில் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூரின் சிறப்பு, பூதபுரி எப்படி ஸ்ரீபெரும்புதூர் ஆனது, ராமானுஜர் தன் குருவான பெரிய நம்பிகளை சந்தித்தது என ராமானுஜரின் பெருமைகள் பல கட்டுரைகளில் உள்ளன.

மொரீஷியஸ் கோயில்களும் தமிழர்களும் என்ற கட்டுரையில் அந்தத் தீவுபிரதேசத்தில் தமிழர்கள் எப்படி புலம் பெயர்ந்தார்கள், எப்படி சங்கடங்களை எதிர்கொண்டார்கள், இப்போது எப்படி வாழ்கிறார்கள், அங்குள்ள தமிழர் கோயில்கள் பற்றிய தகவல்கள் ருசிகரமானவை. குறிப்பாக போர்ட் லூயிஸ் நகரின் மையப் பகுதியில் இருந்து வடக்கே அமைந்துள்ள கைலாசன் கோயில் தமிழர்களின் பழமையான கோயில் ஆகும். அதன் சிறப்புகள் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

அதேபோல 'வித்யாதானம்' பற்றி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரியர்சுவாமிகளின் கட்டுரை பொருள் பொதிந்தது.

தவிர பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளும், கட்டுரைகளும் மலருக்கு சுவை சேர்க்கின்றன. மொத்தத்தில் கலைமகள் தீபாவளி மலர் பாதுகாத்து படிக்கக்கூடிய மலர் என்று சொன்னால் மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.