எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மாக்கியவெல்லி காப்பியம்

மொத்தத்தில் சிக்கலான விஞ்ஞான விஷயங்களை எளிமைப்படுத்தி உணர்த்தியுள்ள நாவல்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:49 am

DIN

மாக்கியவெல்லி காப்பியம் - கபிலன் வைரமுத்து; பக். 260; ரூ.360; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.

'ஆகோள்' என்ற நாவலின் இரண்டாம் பாகம் இந்த நாவல். 2032-ஆம் ஆண்டு ஜெல்லி என்ற மென்கிருமி தாக்கி உலக தரவு மையங்களும், தகவல் தொழில் நுட்பக்கட்டமைப்புகளும் அழிவுக்குள்ளாகத் தொடங்குகின்றன. அப்போது, பாரத அரசு ஒரு கால ரயிலை உருவாக்கி மக்களின் தனிநபர் தரவுகளை காலத்தால் பின்னோக்கிச் சென்று பாதுகாக்க முனைவதுதான் ஆகோள் நாவலின் கதை.

அதன்தொடர்ச்சியாக, நடைபெறும் நிகழ்வுகளை மாக்கியவெல்லி காப்பியமாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய பெருங்காமநல்லூர் மக்கள் தங்கள் கைரேகைகளைத் தர மறுத்ததையும், இன்றைய நவீன தகவல் திருட்டுகளையும் ஒப்பிட்டுச் செல்லும் கதை நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் கால ரயில் மூலம் இணைத்து பிரமிப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

பொதுமக்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாப்புக்கும் 'நெபுலா' என்ற அறிவியல் அதிசயத்தின் தரவுகள் கடந்த காலத்தில் மதுரை - தேனி எட்டு நாட்டுப் பகுதியில் சேமிக்கப்படுவது, கடந்த காலத்துக்கு கால ரயில் மூலம் சென்று அந்தத் தரவுகளை மாக்கியவெல்லி அழிக்க முயல்வது என ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற சுவையை நாவல் அளிக்கிறது.

கடந்த காலத்திலிருந்து காலரயில் மூலம் நிகழ் காலத்துக்கு வந்த சின்ன மாயன், நித்திலன், நெய்தல், உறங்காப்புலி, மாயவனம் என அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.