சில பயணங்கள் சில பதிவுகள் (முதல் பகுதி)
அரசியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

சில பயணங்கள் சில பதிவுகள் (முதல் பகுதி) - சுப்பு; பக். 362; ரூ.540; ஆதாரம் வெளியீடு, சென்னை-17;✆ 70100 68836.
தமிழர்களின் வாசிப்பு உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் ஆய்வு நூலான 'திராவிட மாயை -ஒரு பார்வை' என்ற நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது. இந்த நூலை எழுதிய நூலாசிரியர் தனது தன் வரலாற்றை எழுதிய நூல்தான் இது. வழக்கமாக சுய தம்பட்டமாக எழுதாமல், அரசியல், ஆன்மிகம், இலக்கியம், சட்டம், ஆன்மிகப் பெரியோர்கள், முக்கியமான அரசியல் திருப்பங்கள், ஆன்மிகத் தலங்கள், தேர்தல்கள், சுவாரசியமான நிகழ்வுகள் போன்ற பல்வேறு சிறப்புமிக்க, படித்தறிய வேண்டிய தகவல்கள் நிரம்பியுள்ளன.
காஞ்சி சங்கர மடம் எதிரே பெரியார் ஈ.வெ.ரா. சிலையை வைக்க வேண்டும் என்ற மு.கருணாநிதியின் கோரிக்கையை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட விதம், இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் கபில்தேவிடமிருந்த கோப்பை மாறியது எப்படி என்பன உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்கத் தகவல்களின் களஞ்சியமாகவும் இந்த நூல் விளங்குகிறது.
திராவிட இயக்க அரசியலில், அரிய பல தகவல்களை நூலாசிரியர் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். காஞ்சி பெரியவர், பக்தராஜ் மகராஜ், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், புட்டபர்த்தி, திருவண்ணாமலை, ஜதி பல்லக்கு. போன்ற ஆன்மிகக் கட்டுரைகளோடு, வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...