ஆயிரம் இடர் வரினும்
ஜாதியத்தின் கிடுக்குப் பிடியை எதிர்கொண்டு ஆரோக்கியமான சமூதாயம் அமைவதற்கு பாடுபடுவதை இந்நாவல் பேசுகிறது.

ஆயிரம் இடர் வரினும்... எஸ்ஸார்சி, பக்.320, ரூ.300, உதயகண்ணன் நூல் வெளியீடு, சென்னை - 11, ✆ 94446 40986.
கிராமங்களில் ஜாதியின் தாக்கம் தொடர்வதையும், அதனால் ஏற்பட்டுள்ள இன்னல்களையும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறது இந்த நாவல். 1980 காலகட்டத்தில் நிகழ்கிறது.
தருமங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரன் அருகில் உள்ள முதுகுன்றத்தில் உள்ள தொலைபேசி நிலையத்தில் பணிபுரிகிறான். அங்கு உயரதிகாரியான செல்லமுத்து மாற்று
சமூகத்தை சேர்ந்தவர். இருவரிடையே உள்ள உரையாடல் மூலம் சமூகத்தில் ஜாதிய தாக்கத்தின் நிலையை நூலாசிரியர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். ஜாதிய புரிதலுடன் சந்திரன் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை எதார்த்த நிலையில் பதிவு செய்துள்ளது சிறப்பு.
அருந்ததியர், நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்க்கை நிலை தற்போது வரை மாறாமல் இருப்பது விவரிக்கப்பட்டுள்ளது. 'மனிதனை மனிதனாகப் பார்க்கத் தெரியாதவர்களுக்கு கடவுள் காட்சி கொடுப்பாரா?' எனும் பதிவு மனிதத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறுகிறது.
எந்த ஜாதியாக, மதமாக, நாடாக இருந்தாலும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் நூலாசிரியர் பதிவு செய்யத் தவறவில்லை.
பாரம்பரியம், பண்பாடு என ஆண்டாண்டு காலமாகக் கூறப்படும் நிகழ்வுகளுக்கு பின்னுள்ள சாதிய கொடுமைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஜாதியத்தின் கிடுக்குப் பிடியை எதிர்கொண்டு ஆரோக்கியமான சமூதாயம் அமைவதற்கு பாடுபடுவதை இந்நாவல் பேசுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...