வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈழத்து மின்னல்கள்

மனோன்மணியின் குறுந்தொகை ஆய்வு நூலைச் சிறப்பு நிலையில் கவனம் பெறும் ஒன்றெனக் கூறுகிறார் இரா. இரம்யா.

News image
Updated On :25 நவம்பர் 2024, 2:03 pm

DIN

ஈழத்து மின்னல்கள் - நெறியாளுகை - இரா. அறவேந்தன், (பதிப்பாசிரியர் - இ.சு. அஜய்சுந்தர்); பக். 148; ரூ.170; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆ 044 - 26251968.

ஈழப் பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் இணையரின் தமிழியல் பங்களிப்பை விளக்கி தில்லி ஜேஎன்யு சிறப்புத் தமிழ்த் துறை நடத்திய இணையவழி உரைத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஜப்பானிய மொழியிலும் திறமிக்க இவர்களுடைய இலக்கண இலக்கிய ஆய்வுகள், ஈழத்து ஆய்வுகள், ஜப்பானிய ஆய்வுகள் என எட்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. 'தமிழ்மொழி இலக்கண இயல்புகள்' நூலை இலக்கண நூலன்று; தமிழின் இலக்கணப் பண்புகளைப் பொதுவாகப் பேசும் நூல் எனக் குறிப்பிடுகிறார் இரா. செயராமன்.

'தமிழின் பா வடிவங்கள்' பற்றிய நூலில் விஜயநகர, நாயக்கர் கால ஆட்சியில் அரசுசார் செல்வாக்கைத் தமிழ் இழந்திருந்ததைப் போலவே தமிழ்மொழிசாரா பல்லவர் காலத்திலும் இருக்க, நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழைப் பேணியுள்ளனர் என்பது விளக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார் அ.மோகனா.

மனோன்மணியின் குறுந்தொகை ஆய்வு நூலைச் சிறப்பு நிலையில் கவனம் பெறும் ஒன்றெனக் கூறுகிறார் இரா. இரம்யா.

ஈழப் பண்பாட்டில் தீட்டும் புனிதமும் கட்டுரையில் 'சாதியும் துடக்கும்' நூலை ஆய்வுக்குள்படுத்தும் மு. முரளிதரன், புத்த, கிறிஸ்தவ சமயங்கள் எவ்வாறு சநாதன கருத்தியலுக்குள் ஆட்பட்டுக்கொண்டன; யாழ் மக்களிடம் வெளிப்படுவது பற்றிக் குறிப்பிடுகிறார்.

முதன்மையான 'மன்யோசு மொழிபெயர்ப்பின் சிறப்பியல்புகள்' கட்டுரையில், வாய்மொழிப் பாடல்களாக இருந்து எழுத்து வடிவத்தில் தொகுக்கப்பெற்ற இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் இணையர் மேற்கொண்ட முனைப்புகளையும் அக்கறையையும் விளக்குகிறார் நி. கனகராசு.

தாய்மொழியைத் தமிழாகக் கொண்டுள்ள ஒருவர், வேறொரு மொழியின் செவ்வியல் இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க முயலும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நூலின்வழி அறிந்துகொள்ள முடியும். க. ஜவகர், இரா. தமிழ்ச்செல்வன், செல்வ அம்பிகை நந்தகுமரன் கட்டுரைகளும் நல்ல அறிமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.