பாமரனின் பார்வையில் பகவத் கீதை
கீதையின் சாரத்தை அனைவரும் எளிமையாக உணர்ந்து பயன்பெற சிறந்த வழிகாட்டி இந்நூல்.

பாமரனின் பார்வையில் பகவத் கீதை; சேவாலயா முரளிதரன்; பக். 600; ரூ.600; வானதி பதிப்பகம்; சென்னை-17; ✆ 044-24342810.
ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் என பெருமக்கள் பலர் பகவத் கீதைக்கு உரை நல்கியுள்ளனர். ஒவ்வொரு உரை விளக்கமும் அவரவர் துறை சார்ந்த பார்வையைக் கொண்டிருக்கும். இந்த நூல் பகவத் கீதையைப் பற்றிய ஒரு பாமரனின் பார்வை.
பகவத் கீதை குறித்து சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துகள், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் எழுதிய உரைகள்- இம்மூன்றையும் சேர்த்து பார்க்கும்போது தனது மனதில் எழுந்த எண்ணங்களைத் தொகுத்து அளித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
கீதையின் குறிப்பிட்ட ஸ்லோகங்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கான விளக்கங்களை அன்றாட வாழ்விலிருந்து கையாண்டு 114 கட்டுரைகளாகத் தந்துள்ளார். பாமரரும் எளிதில் கீதையை புரிந்துகொள்ளச் செய்ய உதவும் சீரிய முயற்சி ஒவ்வொரு கட்டுரையிலும் மேலோங்கியுள்ளது.
'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்பதுதான் கீதையின் மையக் கருத்து. பலன் இல்லாத வேலையைச் செய்வதா? பலனே தேவையில்லாதபோது ஏன் வேலை செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் எழலாம். உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்தால் தானாக பலன் கிடைக்கும் என்பதுதான் அந்த வரிகளுக்குப் பொருள்- இவ்வாறு நூலாசிரியர் அளித்திருக்கும் எளிய விளக்கங்கள் வாசிக்கத் தூண்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...