எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

'நலமொடு உயிர் வாழ...'

ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 9:13 am

DIN

'நலமொடு உயிர் வாழ...' - மருத்துவர் சோ.தில்லைவாணன், பக்கம் - 125; ரூ. 200; எமரால்டு பதிப்பகம், எழும்பூர், சென்னை - 600008; ✆98406 96574.

நலமொடு உயிர் வாழ சித்த மருத்துவ மூலிகைகளைக் கொண்டு வழிகாட்டியுள்ளார் நூலாசிரியர் மருத்துவர் சோ.தில்லைவாணன்.

இதயத்தின் நலம் காக்க திராட்சை உதவும் என்றும், அதில் உள்ள 'ரெஸ்வெரட்ரால்' உலக அளவில் அதிக பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோரியாசிஸ் தோல் நோய்க்கு கற்றாழை மூலிகை பெரும்பயன் அளிக்கும் என்று அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.

அத்துடன் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து சிறுநீரகத்தைக் காத்துக்கொள்ள கருஞ்சீரகமும், கால் எரிச்சலைப் போக்க லவங்கமும் பயன்படும் என்று விளக்குகிறது. கண்களுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி கல்லீரலையும் காக்கும் என்பது பலருக்கு புதிய தகவல். தூக்கமின்மைக்கு பிரமி கீரையும், ஆசன வாயில் ஏற்படும் பவுத்திரத்திற்கு குப்பைமேனியும் பயன்படும் என்று எளிய மூலிகைகளைக் கொண்டு நோய் தீர வழிகாட்டுகிறது.

மூட்டுக்களை வாட்டும் வாத நோய்களுக்கு சிற்றாமுட்டி உதவும் என்றும், வைட்டமின் டி குறைபாட்டுக்கு சுண்டைக்காய் போதும் என்றும், சிறந்த மூலிகை கார்டியோலஜிஸ்ட் மருதம்பட்டை என்றும் பாரம்பரிய மூலிகைகளைப் பட்டியலிட்டு மருத்துவ நலனுக்கு பாதை அமைக்கிறது. ஆயுள்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.