வாழ்க்கை நமக்கே
வாழ்க்கையை இனிப்பாகவும், குணமாகவும் வாழ விரும்புபவர்கள் வாசித்து பயன் அடைய இந்தநூல் அருமருந்து.

வாழ்க்கை நமக்கே - முனைவர் சுந்தர ஆவுடையப்பன்; பக். 208; ரூ.180; குமரன் பதிப்பகம், சென்னை 17; ✆94440 13999
''வாழ்க்கை வாழ்வதற்கே'' இது மானுடர்களுக்கான வாழ்வியல் போதனை. இதைப் புரிந்து வாழ்பவர்கள் வாழத் தெரிந்தவர்கள். அந்த வகையில் வாழத் துடிக்கின்றவர்களுக்கு வாழ்வியல் அருமைகளை அறிய எண்ணற்ற நூல்கள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் நற்றமிழ் பேச்சாளரான நூலாசிரியரின் சிந்தனையில் உருவான இந்த நூல் நன்னம்பிக்கையூட்டியாக உள்ளது. முப்பது தலைப்புகளில் வாழ்வியலுக்கு தேவையான குறிப்புகள் நயம்பட இடம் பெற்றுள்ளன.
முதல் பகுதியே வாழ்த்தி வாழ்வோம் என்பதுதான். 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' என்பது தவறு. வயதில் சிறியவர்கள் பெரியவர்களை வாழ்த்தலாம் என்பதற்கான காரணங்கள் ரசிப்புக்கு உரியதாக உள்ளது.
'பலரும் கோபத்தால் பல நல்ல நண்பர்களை, உறவுகளை இழந்திருப்பார்கள், கோபம் கூடாது, அது அழிவைத்தரும்' என்பதை மகாத்மா காந்தியின் வாழ்வியல் நடப்பை மேற்கோள்காட்டி 'கோபம் குணமாகட்டும்' என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் கருத்துகள் ஆகச்சிறந்தவை. இதுபோன்று சுற்றமும் நட்பும், பணம் பத்தும் செய்யும், நியாய வணிகம் விட்டுக்கொடுப்பதன் வெகுமதி, உறக்கம் என்னும் மாமருந்து, என அத்தனை கட்டுரைகளும் அருமை. வாழ்க்கை நமக்கே என்பதையும் எப்படி வாழவேண்டும், எதை விடவேண்டும், எதை தொடரவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது. வாழ்க்கையை இனிப்பாகவும், குணமாகவும் வாழ விரும்புபவர்கள் வாசித்து பயன் அடைய இந்தநூல் அருமருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...