பன்முகப் பார்வையில் தாகூர் - வீ.பா. கணேசன்; பக். 168; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044 - 42009603.
வங்கத்தின் மகாகவி ரவீந்திரநாத் தாகூரையும் தமிழின் மகாகவி பாரதியையும் முழுவதுமாகக் கற்றறிந்து ஒப்பிட்டு விவாதித்த காலமும் இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு தாகூர் வாழ்க்கைச் சித்திரத்தைத் தொடர்ந்து அவருடைய படைப்புலகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
'தாகூர் கவிஞர் மட்டுமல்லர்; நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்' என்பதை ஏராளமான தகவல்களுடன் சிறப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
இசைப் பிரியர்களின் விருப்பமான ரவீந்திர சங்கீதத்தின் வரலாறு, பின்னணியுடன், அவருடைய இசைப்பாடல்களில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் ரவீந்திரர் எந்த அளவு
அக்கறை கொண்டிருந்தார் என்பதும் விளக்கப்படுகிறது. தாகூரின் நாடகப் பயணம் பற்றி விவரிப்பதுடன், கதைக்களன் இயலில் சிறுகதைகள், நாவல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவை இன்னமும்கூட விரிவாக எழுதப்பட வேண்டிய விஷயங்கள்.
கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், ஓவியக் கலை, திரைப்படக் கலை, கல்விப் புலம், ஊரக வளர்ச்சி என ரவீந்திரர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
ரவீந்திரருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உறவையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், 'ஒரே தலைமுறையில் பிறந்த இதுபோன்ற இரண்டு தனிச்சிறப்புமிக்க ஆளுமைகள்' என்ற ஜவாஹர்லால் நேருவின் கடித வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். தாகூர் பற்றிய மிகச் சிறந்த - ஆழமான அறிமுக நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாளை என்ன வேலை? கல்லூரி படிப்பு பற்றிய வழிகாட்டி

நடந்தாய் வாழி நதி...

வரப்பெற்றோம் (09-03-2026)
உணவு டெலிவரிக் கதைகள் (நாகரிக வாழ்வில் நவீனச் சுரண்டல்)
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...