மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பத்துப்பாட்டு தெளிவுரை

தமிழர் பாரம்பரியத்தை இனிவரும் இளைய தலைமுறையினரும் அறிய உதவும் நூல் இது.

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 9:28 am

DIN

பத்துப்பாட்டு தெளிவுரை - தமிழமுதன், பக்.319; ரூ.350, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆93805 30884.

திருமுருகாற்றுப்படை, மலைபடுகடாம் உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்களுக்கான தெளிவுரையை எளிய உரையாக்கியுள்ளதோடு, அந்த நூல்கள் எத்தகையவை, அவற்றை தொகுத்தவர்கள், உரை எழுதியவர்கள் விவரங்களையும் தொகுத்துள்ள நூலாசிரியரின் முயற்சி சிறப்புக்குரியதாகும்.

திருமுருகாற்றுப்படை என்பதை பயணநூல் போல விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். பாடல்களின் விளக்கமும், அதில் சுட்டப்படும் பூ உள்ளிட்டவற்றுக்கான உவமையும் ரசிக்கும்படி உள்ளது.

பொருநராற்றுப்படையில், இசைவாணர்கள் வள்ளல்களிடம் பொருள் பெற்று பாடும் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் பெரும்பகுதி வனப் பகுதிகளின் வளமை, அபாயம், விலங்குகளின் நடமாட்டம் என இயற்கையை படிப்போர் கண்முன் காட்சிப்படுத்துவதை உணரமுடிகிறது. அரசர்களைப் பற்றி பொருநராற்றுப்படை பாடல்கள் விவரித்தாலும், கரிகால் சோழனின் கருணைக் கொடை சிறப்பை வியப்பான செய்திகளுடன் வெளிப்படுத்தியிருப்பதையும் காண முடிகிறது.

கடையெழு வள்ளல்களை வரிசைப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையின் பாடலை படிக்கும்போது, எத்தகைய இயற்கை வளமிக்க பகுதியாக நம் தமிழகம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. மதுரைக்காஞ்சியானது பெரும் வரலாற்றுப் பொக்கிஷமாகவே பல தகவல்களை உள்ளடக்கியிருப்பதை காணலாம்.

மலைபடுகடாம் மருத நில மக்களின் வாழ்வை, வசதியை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.