எனது நாடக வாழ்வில் - டி.வி.ராதாகிருஷ்ணன்; பக்.200; ரூ.260; அகநாழிகை, செங்கல்பட்டு- 603 001; 7010139184.
வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலாசிரியர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத் துறையில் ஈடுபட்டுவருகிறார். முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி தயாரித்தவர். இவரது 'சௌம்யா குழு' 1,500-க்கும் மேற்பட்ட நாடகக் காட்சிகளை நடத்தியதோடு, இவற்றில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் நடித்துள்ளனர்.
இந்த அளவுக்கு நாடகத் துறையில் அளப்பரிய பங்கை மேற்கொண்ட இவர், சோ, விசு உள்ளிட்ட பிரபலங்களுடனான நட்பு, தனது நாடகங்கள் குறித்து விளக்கம், அதில் நடித்தவர்கள், நாடகச் சிறப்புகள், தனது அனுபவங்கள் என்று நாடகத் துறைக்கு நல்லதொரு நூலை அளித்துள்ளார்.
'பேசும் படங்கள் தோன்றியதால் நாடகங்கள் நலிவுற்றன. அதற்கு முன்பு வரை நாடகவியலாளர்கள் பின்வரும் கலைஞர்களுக்கு நாடகம் சார்ந்த விஷயங்களை ஆவணப்படுத்திவிட்டுச் சென்றனர். பின்னர், 1950-இல் நாடகத் துறை மறுமலர்ச்சி பெற்றும் யாரும் ஆவணப்படுத்தவில்லை' என்று குறைபடும் நூலாசிரியர், எதிர்காலத் தலைமுறையினருக்காக தனக்கு அறிந்த நாடகத் துறை விஷயங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு கட்டுரையினுள்ளும் நாடகக் காட்சிகளையும், உரியவர்களின் புகைப்படங்களையும் சேர்த்திருப்பது நூலுக்கு மெருகேற்றுகிறது.
சிவாஜி கணேசன், ஒருவிரல் கிருஷ்ணாராவ், குட்டி பத்மினி, கமலா காமேஷ், பரத், மணிபாரதி உள்ளிட்ட நாடக நடிகர்கள் குறித்த ருசிகரமான சம்பவங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த பிரபலங்கள் பலரைப் பட்டியலிட்டுள்ள நூலாசிரியர், இத்துறையில் தனக்கு நேரிட்ட சறுக்கல்களையும் கூறியிருப்பது வியக்க வைக்கிறது. எதிர்காலத் தலைமுறையினருக்கு நாடகத் துறை குறித்த நல்லதொரு ஆவணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...