சேரர் அரசியல் நெறி (சங்க காலம்)

துணைநூல் பட்டியல், சேர மன்னர் அட்டவணை, புலவராய் விளங்கிய சேரர்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சேரர் அரசியல் நெறி (சங்க காலம்)
Updated on
1 min read

சேரர் அரசியல் நெறி (சங்க காலம்); ச.குருசாமி; பக்.312; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், வண்ணாரப்பேட்டை, சென்னை - 600 021, ✆ 93805 30884.

இந்த ஆய்வு நூல் குலத் தொன்மை- ஆள் நிலம், சேரர் மரபு, அவையோர் அரசியல் வினைஞர், ஆட்சி முறை, அரண் நிலைகள், போர்கள், அரசியல் நெறி ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

'குலத் தொன்மையும் ஆள் நிலமும்' என்ற தலைப்பின் முதல் பகுதி தமிழகத்தின் அரசின் தோற்றம், முதல் வேந்தன் தோன்றிய நிலம், சேரர் தம் தொன்மையை ஆய்கிறது. தமிழகத்தின் ஆள் நிலத்தையும், சேர நாட்டின் ஆள் நிலத்தையும் அதன் தலைநகரமான வஞ்சி சேர நாட்டில் உள்ளதா அல்லது கொங்கு நாட்டில் உள்ளதா என்பதையும் இரண்டாம் பகுதி ஆய்கிறது.

'சேரர் மரபு' என்ற பகுதியில் அவர்தம் மரபு, சேர மன்னர் தொகுப்பு, 'அவையோரும் அரசியல் வினைஞரும்' என்ற பகுதியில் அவையோர், அவர்தான் பணி, அதேபோல அரசியல் வினைஞர் அவர்தம் பணி, 'ஆட்சி முறை' என்ற பகுதியில் அரசர் பணி, அவர்

களுக்கு துணை புரிந்த ஊராட்சி முறை, ஊராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது, மேலும் படை அரண், பாசறை, சேர தம் வீரம், சேரர்களின் போர்கள், போர்களுக்கு உரிய நிகழ்வுகள், சேரர் அரசியல் நெறி, நீதிநெறிமுறை, போர்நெறி, வரி விதிப்பு குறித்துச் சொல்லப்பட்டுள்ளன.

சேரரின் தலைநகரமாக வஞ்சியோடு கருவூரும் விளங்கியது, பதிற்றுப்பத்தின் வழி காணலாகும் சேரர்கள், புறநானூறு மற்றும் பிற இலக்கியத்தின் வழி காணலாகும் சேர வேந்தர்கள், பாரதப் போரில் பெருஞ்சோறு கொடுத்த உதியஞ்சேரல் என படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.

போர்புரிய சொல்லப்படும் 10 காரணங்கள், போரின் தொடக்கத்திலிருந்து அதன் ஒவ்வொரு நிலையையும் விவரிக்கும் பகுதியான 'சேரர் புரிந்த போர்' ஆய்வு, போரையே பார்த்துவிட்டு வந்த உணர்வைத் தருபவை.

'முடிபுகள்' என்ற பகுதியில் சிறுசிறு துளிகளாக நூலின் அனைத்து சாரங்களையும் பிழிந்து தந்துள்ளார். துணைநூல் பட்டியல், சேர மன்னர் அட்டவணை, புலவராய் விளங்கிய சேரர்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com