லெமூரியாவிலிருந்து சென்னை வரை

எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தமிழ்நாட்டின் வரலாற்றை பண்டைக்காலம் தொட்டு தற்காலம் வரை பதிவு செய்யும் நூலாசிரியரின் முயற்சியே இந்நூல்.
லெமூரியாவிலிருந்து சென்னை வரை
Updated on
1 min read

லெமூரியாவிலிருந்து சென்னை வரை - அமுதா பாண்டியன்; பக்.160; ரூ.190; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083, ✆ 98409 52919.

எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தமிழ்நாட்டின் வரலாற்றை பண்டைக்காலம் தொட்டு தற்காலம் வரை பதிவு செய்யும் நூலாசிரியரின் முயற்சியே இந்நூல்.

தமிழ்நாடு - தமிழர் வரலாறு என்பது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் இருந்து தொடங்குகிறது எனலாம். சங்கத்தின் தோற்றத்தை அறிய முற்படும்போது கடலில் தொலைந்துபோன தமிழர்களின் வரலாறு தென்படுகிறது.

கடலில் மூழ்கிய அந்த நிலப்பகுதியை குமரிக் கண்டம் என்றும் லெமூரியா கண்டம் என்றும் தொல்லியலாளர்கள் அழைத்தனர். இருப்பினும், லெமூரிய கண்டம் குறித்த சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன. லெமூரியா இருந்ததற்கான சான்றுகள், வாதங்கள் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

அன்றைய குமரிக்கண்டம் அல்லது லெமூரியா கண்டம் தொடங்கி இன்று வரை தமிழக வரலாற்றின் பல்வேறு தளங்களில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சி, சாதனைகளை இந்நூல் பருந்துப் பார்வையில் பதிவு செய்துள்ளது.

ராமாநுஜர் 'வைணவத்தில் ஜாதி இல்லை' என்று ஓங்கி உரைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை 'திருக்குலத்தார்' என்றழைத்தார். மகாத்மா காந்தியும் அவர்களை ஹரிஜன் என்றார். களப்பிரர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்க் காவியங்கள் தோன்றின. இவர்கள் ஆட்சிக்காலத்தை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறுகின்றனர் தமிழறிஞர்கள்.

கடலூரில் பிறந்த அஞ்சலை அம்மாள் மகாத்மா காந்தியால் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' என்றழைக்கப்பட்டார்; சுதந்திரம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்துதான் இரு நாடுகளுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒரே நாட்டில் ஒரே ஊரில் இருந்த மக்கள் ஒரே நாளில் இரு நாட்டைச் சேர்ந்தவர்களாயினர் என்பன உள்ளிட்ட ஏராளமான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com