தமிழ்நாடு தனி மாநிலம் உருவான வரலாறு
தனி மாநிலம் குறித்து தமிழில் ஆதாரப்பூர்வமாக விளக்கும் வெகுசிலவற்றிவ் இந்நூல் மிகுந்த கவனம் பெறுகிறது.

தமிழ்நாடு தனி மாநிலம் உருவான வரலாறு - ஆர்.ராதாகிருஷ்ணன்; பக்.208; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-27; ✆ 81480 66645.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ்நாடு மாநிலம் எனப் பெயர் சூட்டப்பட்டது வரையிலான சம்பவங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வரலாறாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. முதல் இந்திய சுதந்திர போருக்குப் பிறகு, அன்றைய ஆங்கில நிர்வாகம் இந்தியா முழுமைக்கும் நில அளவை, மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னெடுத்தது. இதன் மூலம் ஒவ்வொரு ஜாதியும், மதமும், குறிப்பாக மொழியும் எத்தனை பேரால் பின்பற்றப்படுகிறது என்ற தகவல் வெளிப்பட்டது. இதுவே பின்னர் மொழி ரீதியான மாநில உரிமைக்குரல் எழும்பக் காரணமாக அமைந்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
சுதந்திர இந்தியாவில் மொழி ரீதியாக முதல் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம் ஒடிஸா. இதன் வரலாறும் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழுக்கு முதன்முதலில் தனி மாநிலம் கோரிக்கையை எழுப்பியவர் ம.பொ.சிவஞானம். மாநிலங்களில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி, தமிழருக்குத் தனி மாநிலம் என குரல் எழுப்பினார் என்றாலும் அவர் அதிகாரமிக்க பதவியில் இல்லாததால் அவரது கோரிக்கை வலுப்பெறவில்லை.
இந்தியப் பிரிவினையால் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிப்பதில் ஏற்பட்ட தாக்கம், ஆந்திர தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது, தென் மாநில எல்லைகளை வரையறுக்க பசல் அலி கமிஷன் அமைத்தது, சங்கரலிங்கனார் மரணம், தமிழ்நாடு தனி மாநிலமானது எனப் பல்வேறு நிகழ்வுகள் இந்நூலில் நேர்த்தியாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...