சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒளவையின் தமிழமுது

அணிந்துரைகளின் தொகுப்பைக் கொண்டே ஒரு நூலை உருவாக்கியிருப்பது வித்தியாசமான சிந்தனை.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 1:03 pm

DIN

ஒளவையின் தமிழமுது- ஒளவை அருள்; பக். 390; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18; ✆ 044 -43418700.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல்.

தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம், முன்னுரை, அணிந்துரைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்னுரைகளையும், அணிந்துரைகளையும் எழுதியிருப்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 அணிந்துரைகள், முன்னுரைகளின் திரட்டு ஒளவையின் தமிழமுதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியக் கட்டுரைகள், கவிதை நூல்கள், ஆய்வு நூல்கள், ஆன்மிக நூல்கள் எனப் பல்வேறு வகை நூல்களுக்கு எழுதப்பட்ட அணிந்துரைகள் கூர்மையாகவும், சிறந்த வாசிப்பு அனு

பவத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.தொடர்புடைய நூல்களை வாசிக்கவும் தூண்டுகின்றன.

ஒவ்வொரு நூலின் உள்ளடக்கத்தையும் அதன் அணிந்துரையோ-முன்னுரையோ தெளிவாகச் சொல்லிவிடும்; அதேவேளையில் அந்த நூலை ஆழ்ந்து முழுமையாகப் படித்தால்தான் அணிந்துரை எழுத முடியும் என்ற அடிப்படையில், ஒளவை நடராசனின் ஆர்வமும் உழைப்பும் நமக்குப் பிரமிப்பைத் தருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.