சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செல்வம் சேர்க்க நிச்சய வழி

குறைந்த வருமானத்தை கொண்டு முதலீடு செய்ய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:18 pm

DIN

அள்ள அள்ளப் பணம்-10 எஸ்.ஐ.பி. செல்வம் சேர்க்க நிச்சய வழி- சோம வள்ளியப்பன்; பக்.216; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை-14: 044 -4200 9603.

பங்குசந்தை, போர்ட்ஃபோலியோ முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பிட்காயின், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முதலீடு சார்ந்து எழுதி வரும் சோம.வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்' எனும் நூல் வரிசையில் 10-ஆவது நூலாக இடம்பெற்றுள்ளது 'எஸ்.ஐ.பி.'.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என அழைக்கப்படும் எஸ்.ஐ.பி. எவ்வாறு செயல்படுகிறது, அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம், முதலீட்டு முறை குறித்து விவரிக்கிறது இந்நூல். பங்குச் சந்தை போன்று ஆபத்து நிறைந்ததாக இல்லாமல், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் எஸ்.ஐ.பி. மூலம் சிறுக சிறுக பணம் சேர்த்து எப்படி லாபம் பார்க்கலாம் எனும் வழிமுறைகளை நூலாசிரியர் வழங்கியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தனிநபர் பொருளாதார வளர்ச்சியும் அவசியம். தனிநபர் ஒருவர் குறைந்த வருவாய் ஈட்டும் நிலையில் இருந்தாலும், அதிலிருந்து சேமிப்பதன் அவசியத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

கடினமான சொற்களைக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை எளிய தமிழில் பதிவு செய்துள்ளது சிறப்பு. ஓர் இலக்குடன் எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதை புள்ளிவிவரத்துடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். அதே சமயம் எஸ்.ஐ.பி. எனும் ஒரு முதலீட்டை மட்டும் நம்பியிருக்காமல் நிதியை பகிர்ந்து முதலீடு செய்யும் முறை மற்றும் அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். சேமிப்பின் அவசியத்தையும், பணத்தை அதிகப் பணமாக்கும் முறையையும் விளக்குகிறது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.