ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மனம் எனும் ஞானி

மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள், அச்சம், விடை தெரியாத வினாக்களுக்கான விளக்கம், பிரபஞ்ச ரகசியம் போன்றவற்றுக்கான விடைகளை இந்த நூல் உணர்த்துகிறது.

News image
Updated On :2 மார்ச் 2026, 12:37 pm

தினமணி செய்திச் சேவை

மனம் எனும் ஞானி- மானோஸ்; பக்.144; ரூ.150; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044- 24331510.

உலகம் தோன்றியது எப்படி?, மனிதர்கள் எப்படி தோன்றினர், மனக் குழப்பங்கள் ஏன்?, மாயத்தோற்றம், கனவுகளும் பயமும் ஏன்?, பூமியின் வளர்ச்சி, உயிரினங்களின் தோற்றம், சப்தம், ஆத்மா, ஈர்ப்பு சக்தி, மனிதநேயம், இயற்கை உள்ளிட்ட பல்வேறு விடைதெரியாத விஷயங்களுக்கு நூலாசிரியர் தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

தத்துவ அறிவு, விஞ்ஞான அறிவு, கணித அறிவு ஆகிய மூன்றும் மனிதர்கள் பிறக்கும்போதே விருத்தியாகிறது என்றும், விஞ்ஞானமும் தத்துவமும் வளர்கின்ற இடத்தில் ஆன்மிகமும் வளரும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். அப்போது, போதும் என்ற மனம் மனிதர்களுக்கு வந்துவிடும்; பொருளைத் தேடுவதிலேயே ஆயுளைக் கழித்து ஆயுளை முடிப்போர் ஆத்ம நிறைவு இல்லாமல், தவிக்கத் தொடங்குவர் என்றும் விளக்குகிறார்.

நாகரிக வளர்ச்சி பெறாத காலத்தில் விலங்குகளுக்காக அச்சமுற்ற மனிதன் மரத்தைக் கட்டிப்பிடித்தவாறு தூங்கும்போது, இரவில் அச்சத்தில் விழிப்பதன் எதிரொலியே "கனவு'. இயற்கையைப் பார்த்து அச்சமுற்ற மனிதர்களுக்கு ஏற்பட்டதே "பயம்', அவ்விரண்டும் மரபணு வழியாக இன்றும் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

மெய்யறிவைப் பெறும்போது, நமது வாழ்வு நிறைவு பெறுகிறது; அதை இந்தப் பிறவியில் பெறாவிட்டால் அடுத்தடுத்த பிறவிகளும் தொடரும். மாயாஜால வித்தைகள், ஆவிகள், சமாதி நிலை, சித்தி அடைதல், தியானம் போன்றவற்றுக்கு நல்லதொரு விளக்கம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

உண்மையான மெய்யறிவைப் பெறுவதற்கான வழிகள், விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள், அச்சம், விடை தெரியாத வினாக்களுக்கான விளக்கம், பிரபஞ்ச ரகசியம் போன்றவற்றுக்கான விடைகளை இந்த நூல் உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.