சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உலகப் போர்க்களங்களில் பத்திரிகை போராளிகள்

புகைப்படப் பத்திரிகையாளர்களும் வரலாற்று நாயகர்களே என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:28 pm

DIN

உலகப் போர்க்களங்களில் பத்திரிகை போராளிகள் - யஷ்வந்த் - பக்.132, ரூ.180, சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை; 044-4507 4203.

ஜனநாயகத்தின் நான்காவது தூணைக் கையாளும் பத்திரிகையாளர்களின் நெஞ்சுரம் எத்துணை வலிமையானது என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக இருக்கிறது. புத்தகத்தின் நாயகர்களாக வலம் வரும் 41 பேரும், உயிரைத் துச்சமாக நினைத்து களமாடி இருக்கிறார்கள். அவர்களும் போர் வீரர்கள்தான். கேமரா என்கிற ஆயுதம் ஏந்தி களநிலவரத்தின் உண்மைகளைக் காத்த வீரர்கள் .

நெஞ்சில் குண்டு பாய்ந்து குருதி கொப்பளித்தும் போர்க்காட்சியைப் புகைப்படமாக்கி உயிர்விட்ட கெஞ்சி நாகை, அகதிகள் முகாமிலிருந்து வெள்ளைக்கொடியுடன் வெளிவந்தபோது இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஜேம்ஸ்

மில்லர், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைக் கொன்று போர்க் குற்றம் புரிந்த இலங்கை ராணுவத்தை அம்பலப்படுத்திய ஜான்ஸ்னோ, இந்தோ-சீன யுத்த களத்தில் புகைப்படக்காரராக நுழைந்த ஹென்றிஹூட் என வெளிநாட்டைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்களின் சாகசங்கள் நமக்குத் தெரியவருகின்றன.

மேலும், 1947 ஆகஸ்ட் 15- இல் மூவர்ணக்கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டதைப் பதிவுசெய்தவர் இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் 'ஹோமை வியாரவாலாவை ' நாம் அறிய முடிகிறது. அவரே காந்திஜியின் இறுதிச் சடங்கை படமெடுத்தவர்.

வியத்நாம், இலங்கை, ஆப்கன், பாலஸ்தீனம், என போர்க் காட்சிகள் மட்டுமல்லாது , உலகத்தலைவர்களின் பிரத்யேக தருணங்கள், சந்திப்புகள், யாரும் அறிந்திடாத அந்தத் தலைவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் ஆகியவற்றுடன் உலகை மாற்றியமைத்த வரலாற்று நிகழ்வுகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் புகைப்படப் பத்திரிகையாளர்களும் வரலாற்று நாயகர்களே என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.