சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை தொகுதி -1

102 அறிஞர்கள் ஆய்ந்தறிந்து எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:14 pm

DIN

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை தொகுதி -1; பதிப்பாசிரியர்கள்: ச.மெய்யப்பன், ச.வே.சுப்பிரமணியன், வே.இரா.மாதவன்; பக்.360; ரூ.400; மணிவாசகர் பதிப்பகம், சென்னை -21; 93805 30884.

19-ஆம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்கள் எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. சிற்றிலக்கிய காலத்தில் வாழ்ந்த இவர், கோயில்களின் வரலாற்றை விவரித்து அதிக அளவில் தலபுராணங்கள் பாடியவர்.

புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத்தமிழ் இலக்கியம், கலம்பகம், கோவை, அந்தாதி என தமிழில் பெரும் பங்காற்றியவராக அறியப்படுகிறார். தமிழ்ச் சிற்றிலக்கிய வளர்ச்சியில் இவருக்கென்று ஒரு சிறப்பிடம் உண்டு.

தன்னிடம் கல்விகற்க வந்த மாணவர்களை தம் பிள்ளைகளாகக் கருதி, பாரபட்சமின்றி கல்வி புகட்டிய ஆசான். பணம் பெற்றுக் கொண்டு கல்வியைப் பயிற்றுவிக்கும் முறை இவரிடம் இருந்ததே இல்லை என்பதைப் படிக்கும்போது இவர் மேல் பெருமதிப்பு மேலிடுகிறது. இவரிடம் சி.தியாகராச செட்டியார், உ.வே.சாமிநாதையர் போன்ற பலர் பாடம் கேட்டு பெரும் பயனும் புகழுமடைந்துள்ளனர். சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியிருப்பார் என்று கூறப்படுகிறது.

இவரது பெருமைகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் 102 அறிஞர்கள் ஆய்ந்தறிந்து எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ் வாழ்க்கை என்ற கட்டுரையில், "திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வரும் வடமொழி வாணவர்கள், வடமொழியில் சுலோகங்களைச் சொல்லும்போது, உடனே அவற்றைக் கவிதையாக்கி தமிழ் மாலை தொகுப்பாராம்' என்ற செய்தி அவருக்கிருந்த வடமொழி, தமிழ்மொழிப் புலமையை எடுத்தியம்புகிறது.

சேக்கிழாரின் செல்வாக்கு, கம்பரும் மகாவித்வானும், அய்யர் கண்ட ஆசிரியப் பிரான், திரு அம்பர்ப் புராணம், ஆறும் ஊரும் நாடும், இயற்கை வருணனைகள், சைவ சமய பத்திநெறி, சென்னையில் எழுந்த செந்தமிழ்ப் பனுவல்கள், பிள்ளையவர்களின் பிள்ளைத் தமிழ் என 102 ஆய்வு மலர்களும் படிக்கப் படிக்க அருட்புதையல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.