சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

சொந்தத் தொழில் நடத்த வேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 9:15 am

DIN

மார்க்கெட்டிங் மந்திரங்கள்- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி; பக். 248; ரூ. 280; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-4200 9603.

பிஸினஸில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வாடிக்கையாளர் என்கிற குலதெய்வத்தின் அருள் வேண்டி நடத்தப்படும் ஐந்து யாகங்கள்தான் இந்தப் புத்தகம். நூலாசிரியர் அப்படித்தான் விளக்கம் தந்திருக்கிறார். சங்கல்பத்திலிருந்து ஆரம்பித்து சர்வம் ஸ்ரீ சிவார்ப்பணமஸ்து என நிறைவு செய்கிறார்.

மார்க்கெட்டிங் தளத்தில் தற்கால தேவைகளைப் பட்டியலிட்டு, தரம் பிரித்து, அதை தனித்தனியே தந்திருக்கிறார். ஐன்ஸ்டீன், டேவிட் ஒகில்வி, தியோடர் லெவிட் போன்ற அறிஞர்களின் மேற்கோள்களைக் காட்டி, அந்த சூத்திரத்தில் ஜெயித்த நமக்குத் தெரிந்தவர்களை உதாரணமாகக் காட்டுகிறார்.

மிக எளிமையாக, அதே நேரத்தில் சுவாரஸ்யமாக வாசிப்பவர் யாவருக்கும் புரியும் வண்ணம் பாசாங்கில்லாத வார்த்தைகளில் சொல்ல வந்த கருத்தை ஆழமாகப் பதியவைக்கிறார். அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் தொழில் முனைவோரின் வெற்றி, தோல்விகளுக்கான காரணங்கள், இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது நமக்குத் தெரிய வருகிறது.

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்துவது என்பதில் இத்தனை படிநிலைகள் இருக்கின்றனவா என்ற வியப்பு ஏற்படுகிறது. பிஸினஸ் வெற்றி என்பது மாய மந்திரமில்லை; மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்றலும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைச் சம்பாதித்தலும், போட்டியாளர்களை மதித்தலும், இனிமையான அணுகுமுறையும் , கவனக்குவியலும் என இந்த நூல் விவரிக்கிறது. வாடிக்கையாளர் என்கிற குலதெய்வத்தின் அருளைப் பெற நமக்கு வழிகாட்டும் நூலாக இது இருக்கிறது.

தொழில்முனைவோருக்கும், ஸ்டார்ட்அப் வகையினருக்கும் வேண்டிய ஏராளமான நுட்பங்கள் கொண்ட இந்த நூல், சொந்தத் தொழில் நடத்த வேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.