ஊத்து - தேனிசீருடையான்; பக். 352; ரூ.400; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
தமிழகத்தில் 18-ஆம் நூற்றாண்டில் வீர வரலாற்றை உருவாக்கிய தொல்குடி மாந்தர்களின் வாரிசுகளாகிய அருக்காணி, பாஞ்சாலி, துரைச்சாமி, பச்சைமலை ஆகியோர்தான் இந்தக் காதல் காவியத்தின் நாயகர்களாகிய பாலமுருகன்-செண்பகலட்சுமி தம்பதிக்கு உடனிருந்து அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் வெற்றியடைய உதவுகின்றனர். எளிமையாகவும், இனிமையாகவும் வெற்றிப் பயணம் செய்த அவர்களின் வாழ்க்கை, பணமதிப்பிழப்புக் காலத்தில் பெரிதும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறது. இவர்கள் மட்டுமா? நாட்டில் லட்சக்கணக்கானோர் சந்தித்த இன்னல்களை இவர்களும் சந்தித்தனர். அதை வாசிக்கும்போது, அந்தக் காலம் நம் கண் முன்னே நிழலாடுகிறது. மிகவும் மோசமான பொருளாதார இழப்புகளைச் சந்தித்த அவர்கள் மீண்டார்களா? அல்லது அதில் மூழ்கிப் போனார்களா? என்பதுதான் கதைக்களம்.
பார்வை மங்கிய குடும்பத் தலைவர் மீண்டும் பார்வை பெற்றது, இளம்வயதுச் சோதனைகள், இவற்றுக்கு இடையே தம்பதியரின் மகன்கள் கதிரவன், மதியவனின் மதம் மாறிய காதல், திருமணம் கைகூடுகிறதா? என்பதெல்லாம் பரவசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. சாமானியர்கள் நாள்தோறும்படும் வேதனைகள், துயரங்களைப் படிக்கும்போது, இதேசூழலில் நமக்கு அறிமுகமானவர்கள் படும் பாடு கண்முன்னே நிழலாடுகிறது.
நாவலின் பல இடங்களில் காணப்படும் கவித்துவமான விவரிப்புகள், இந்நூல் நாவல் என்பதையும் தாண்டி புதிய அனுபவ எல்லைகளுக்குள் நம்மைப் பிரவேசிக்கச் செய்கிறது.
சாமானியர்களும் படித்தறியும் வகையில், எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. நாவல் பிரியர்களுக்கு நல்லதோர் அனுபவத்தைத் தரும் இந்நூல், நூலாசிரியரின் பிற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...