சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காவல் துறையின் கதை

நேர்மையான காவல் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிய வைக்கும் இந்நூல் ஒட்டு மொத்த உலக காவல்துறையின் கதையாகத்தான் இருக்கிறது.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 9:20 am

DIN

காவல் துறையின் கதை - துமிலன்; பக். 496; ரூ.470; அருணோதயம், சென்னை-14; ✆ 93634 50177.

இரவில் பொருள்கள் களவு போகாமல் காவல் காக்க காவலர்களை நியமித்ததுதான் இப்போதுள்ள காவல் துறையின் தொடக்கப் புள்ளி என ஆசிரியர் பதிவிடுகிறார்.

காவல் துறையின் பிரிவுகளான உளவுத் துறை , லஞ்ச ஒழிப்புத் துறை, கைரேகை நிபுணத்துவப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு போன்றவற்றின் தொடக்கம் எங்கு என்பதையும், தற்போது அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், துப்பு துலக்கும் முறைகளையும், கையாளும் விஞ்ஞான யுத்திகளையும் காவல் துறையின் கதையாக சொல்கிறார் நூலாசிரியர். பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் கைரேகையைப் பயன்படுத்தும் முறை வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சுவாரஸ்யமான தகவல்கள் பல கொட்டிக் கிடக்கும் இத்தொகுப்பில், சம்பாதிக்க முடியாதவன் திருடுவான், உடல் பலமில்லாதவன் கொலை செய்வான் என்னும் ஆதிகால சூத்திரத்தை மையமாக வைத்து காவலர்கள் தங்கள் விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறுகிறார் ஆசிரியர். மேலும் இந்தியாவின் நிர்வாகமுறைகள் பெரும்பாலும் அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே வெளிப்படுவதை வாசிக்கும் நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு 'முடிச்சை அவிழ்த்தல்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.