சற்றே இளைப்பாறுங்கள்
தன்னம்பிக்கை, புத்துணர்வை அளிப்பதோடு மட்டுமல்லாது, புதிய பல செய்திகளையும் தாங்கியுள்ளது.

சற்றே இளைப்பாறுங்கள் - பவித்ரா நந்தகுமார்; பக்.128; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 104; ✆ 93805 30884.
தினமணி நாளிதழின் நடுப்பக்கத்தில் நூலாசிரியர் இரண்டு ஆண்டுகளில் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
'ஏன் கலையும் இலக்கியமும் அவசியம்? ' என்ற முதல் கட்டுரையில் அவர் மேற்கோள் காட்டும் நிகழ்வுகள் தன்னம்பிக்கை அளிக்கின்றன. கலையும், இலக்கியமும் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அடிகோலுவது மட்டுமல்லாது, குற்றம் புரியாமல் வாழும் உயர்ந்த வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது என்று குறிப்பிடுகிறார்.
'சாட் ஜிபிடி எனும் பூதம்' என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவை ஜீ பூம்பா பூதத்துடன் ஒப்பிட்டு விளக்கி இருப்பதோடு மட்டுமல்லாது, அதன் மறுபக்கத்தையும் விளக்கி பாதகமான விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்.
நம் அன்றாட வாழ்வில் நிகழும் சின்ன சின்ன நிகழ்வுகளின் பின்னணியில் எத்தனை பெரிய சங்கதிகள் பொதிந்துள்ளன என்பதை மையப்படுத்தி, 'சின்ன சின்ன சங்கதிகள்' என்ற தலைப்பில் நூலாசிரியர் எடுத்துக்கூறும் ஒவ்வொரு நிகழ்வும் வரலாற்று சுவாரஸ்யங்கள்.
கடினமான வாழ்க்கைச் சூழலிலும் அவ்வப்போது எதன் தோளிலோ சற்று இளைப்பாறுவதே சிறப்பான வாழ்வுக்கு வழி வகுக்கும் என 'சற்றே இளைப்பாறுங்கள்' என்ற கட்டுரையில் விளக்குகிறார்.
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், முதியவர்களின் உணர்வுகள், துரித உணவின் கேடுகள், விடுமுறையை அர்த்தமுள்ளதாக்கல், மனித உழைப்பு, ஆண்டாளின் அறிவியல் பார்வை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணிக்கிற இந்நூல், தன்னம்பிக்கை, புத்துணர்வை அளிப்பதோடு மட்டுமல்லாது, புதிய பல செய்திகளையும் தாங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...