சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஷேக்ஸ்பியரின் உலகம் நகைச்சுவை

ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் குறித்த ஓர் ஆழமான அலசல் இத்தொகுப்பு.

News image
Updated On :21 ஜனவரி 2025, 11:10 am

DIN

நாடகங்கள்-வானதி; பக் 240; ரூ. 280; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044- 42009603.

பல நூற்றாண்டுகள் தாண்டி இன்றும் இலக்கிய உலகில் தனது தாக்கத்தை மாறாது வைத்துள்ள ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் குறித்த ஓர் ஆழமான அலசல் இத்தொகுப்பு. 14 நகைச்சுவை நாடகங்களையும் நாடக பாணியில் இல்லாமல், உரைநடை பாணியில் எளிமையாகத் தந்து பின்பு அதனை தனது பார்வையில் ஆசிரியர் அலசி ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் தனது பெரும்பாலான நாடகங்களை நாடோடிக் கதைகளையும், வேற்றுமொழிக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டே எழுதியதாக ஆசிரியர் பதிவு செய்கிறார்.

எலிசபெத் மகாராணி கோரிக்கையை ஏற்று அரசவையிலும், பிரபுக்களின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலும் நாடகங்களை அரங்கேற்றி இருப்பதையும், அக்கால கட்டத்தில் அபத்த நாடக வகையிலும் மற்றும் அமளிகள் நிறைந்த துன்பியல் நாடக உத்தியிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதியிருப்பதையும் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஷேக்ஸ்பியரின் எழுத்து மகிழ்விக்கவே அன்றி, போதிக்க அல்ல என்கிற பார்வை நமக்கு வேண்டும் என்கிறார் நூலாசிரியர். நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதிசயங்கள், அவர்களால் எற்படும் திருப்பங்கள் , நாடகங்களில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் மாறி வேறொன்று நிகழ்வது என அந்த காலத்து நாடக உலகத்துக்கே இத்தொகுப்பு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஷேக்ஸ்பியரின் மேதைமை குறித்து கூறும் ஆசிரியர் அவரின் ஆரம்ப காலப் படைப்புகளில் சில முதிர்ச்சியற்ற தன்மைகள் இருப்பதையும் சுட்டிகாட்டி இருக்கிறார்.

இத்தொகுப்பை வாசிக்கும் போது , ஷேக்ஸ்பியரின் நாடக உலகத்தில், அக்கால மேற்கத்திய உடைகளில் காதல், வீரம், மந்திரம், தந்திரம், சூழ்ச்சி, ஆள்மாறாட்டம், சோகம், குழப்பம் என அனைத்தையும் உள்ளடக்கிய கதாபாத்திரங்கள் உயிர்ப்போடு வாழ்வதை நம்மால் உணர முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.