தெருக்கூத்துப் பறவைகள்

தெருக்கூத்து பற்றிய பின்னணியை அறிந்துகொள்வதற்கான நல்ல நூல்.
தெருக்கூத்துப் பறவைகள்
Published on
Updated on
2 min read

தெருக்கூத்துப் பறவைகள் - இன்ப கலை பிரகாஷ்; பக்.248; ரூ. 225; கனவுத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 131; ✆ 9840321522.

கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான சடங்கியல் கலை வடிவம் என்று அறிமுகப்படுத்தி, தமிழகத்தின், பிற மாநிலங்களின் பல்வகைக் கூத்துகளையும், தமிழ்நாட்டின் கூத்து வடிவங்களையும், கதை வகைகளையும் விவரிக்கிறார் நூலாசிரியர்.

எண்ணற்ற கள ஆய்வுகளை மேற்கோள்காட்டி, தெருக்கூத்தின் பூர்விகக் கலைஞர்கள் வண்ணார்கள் என்று தெரிவிக்கும் ஆசிரியர், தற்போது பரவலாக வன்னியரும் பிற சாதியினரும் இடம் பெறுகின்றனர் என்கிறார். வடக்கத்திக் கூத்தில் வாத்தியம் வாசிப்பதில்கூட , குறிப்பிட்ட சாதியினர் என்ற நடைமுறை இருக்கிறது; முகவீணையை மட்டும் மரபுசார்ந்து நாவிதர்களே இன்னமும் வாசிக்கின்றனர்.

பழந்தமிழ் இலக்கியத்தில் கதை தழுவிய கூத்துகளில் களவேள்வி, வெறியாட்டு, குரவைக்கூத்து, ஆயர் குரவை, நகைக்கூத்து, வாடாவள்ளி எனப் பலவும் அறிமுகமாகின்றன.

மேற்கு மாவட்டங்களில் நிகழ்த்தப்பெறும் மேற்கத்தி பாணி, விழுப்புரம், புதுச்சேரி, திருவள்ளூர் மாவட்டங்களில் நிகழ்த்தப்பெறும் தெற்கத்திப் பாணி தெருக்கூத்துகளின் சிறப்பு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ் நாடக வரலாறும் வளர்ச்சியும் பற்றி அண்ணா, மு.கருணாநிதி, சங்கரதாஸ் சுவாமிகள், ஒளவை டி.கே. சண்முகம், திருவாரூர் கே. தங்கராசு ஆகியோரின் பங்களிப்பு மற்றும் நவீன நாடகப் போக்கில் சே. ராமானுஜம், ந. முத்துசாமி, ஞாநி, கே.ஏ. குணசேகரன் ஆகியோரின் பங்களிப்புகள் பற்றியும் விவரித்துள்ளார்.

தெருக்கூத்துக்கு வித்தூன்றிய புரிசை கிராமம் மற்றும் கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன. தெருக்கூத்து பற்றிய பின்னணியை அறிந்துகொள்வதற்கான நல்ல நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com