சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிசினஸ் மாஸ்டர்ஸ்

தொழில் துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:15 am

DIN

பிசினஸ் மாஸ்டர்ஸ்; பாலு சத்யா; பக். 144; ரூ.175; கிழக்கு பதிப்பகம்; சென்னை-14; ✆ 044-42009603.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற்றவர்களின் பின்னணியை அறிந்துகொள்வதில் எல்லாருக்குமே ஆர்வம் உண்டு. அந்த வகையில், தங்கள் தொழிலில் புதுமைகளைப் புகுத்திய 25 தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளே இந்நூல்.

உலகின் முதல் 'ஐஸ்டு டீ'-யை அறிமுகப்படுத்திய பிரிட்டனின் ரிச்சர்டு பிளெச்சிண்டென், ஜூம் செயலி- எரிக் யுவான், எல் அண்ட் டி- ஏ.எம்.நாயக், விகேசி - நௌஷத், நிர்மா வாஷிங் பவுடர்- கர்சன்பாய் பட்டேல், இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனை அப்பல்லோ- பிரதாப் சி.ரெட்டி என தொழிலதிபர்கள் சாதித்த வரலாற்றை சுருக்கமாக, சுவாரசியமாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.

எல் அண்ட் டி - ஏ.எம்.நாயக் அந்த நிறுவனத்தில் ஒரு ஜூனியர் என்ஜினியராகப் பணியில் சேர்ந்து சேர்மன் நிலைக்கு உயர்ந்தது குறித்த கட்டுரை உழைப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது. காலணி சந்தையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது விகேசி நிறுவனம். சந்தை நிலவரத்தை அறிந்து களமிறங்கியதால் கிடைத்த வெற்றி இது என அதன் உரிமையாளர் நௌஷத் சொல்லும் அறிவுரை முக்கியமானது.

எந்தத் துறையாக இருந்தாலும் சிரத்தையோடு அதன் அடியாழம் வரை போய் செயலாற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு மார்ட்டின் லூயிஸ். சேமிப்பது எப்படி என்று கட்டுரைகள் எழுதியே கோடீஸ்வரர் ஆனவர் பிரிட்டனைச் சேர்ந்த இந்த பத்திரிகையாளர்.

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் சேர்க்கப்பட்டிருக்கும் 'பிசினஸ் மொழிகள்' நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. தொழில் துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.