மகாகவி பாரதியும் மக்கள் எழுத்தாளர் விந்தனும்
உழைப்பாளி வர்க்கத்திலிருந்து விடிவெள்ளி போலத் தோன்றி புரட்சி படைத்த விந்தனை முழுமையாக அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.

மகாகவி பாரதியும் மக்கள் எழுத்தாளர் விந்தனும் - மு.பரமசிவம்; பக். 192; ரூ.240; மோகனசுந்தரம் வெளியீடு, சென்னை-34; ✆ 9444297034.
புரட்சி எழுத்தாளர் விந்தனின் எழுத்து அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது; பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அந்த எதிர்ப்புகளை முறியடிக்க, ஒரே ஆயுதமாக சுயசிந்தனை மிக்க, சுயமரியாதை வாய்ந்த எழுத்தையே பயன்படுத்தியவர் விந்தன் என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு. அவருடைய வாழ்க்கை, படைப்புகள் குறித்து பலரும் அறியாத பல தகவல்களைச் சொல்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள்.
விந்தன் எழுதிய ஏழு நாவல்களில் ஐந்து நாவல்கள் போராட்டங்கள், வழக்குகளைச் சந்தித்தன என்றால் விந்தனின் எழுத்து வீச்சு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும். அச்சுத் தொழிலாளியான விந்தனை, இலக்கியவாதியாக அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் கல்கி. பின்னாளில் கல்கி இதழில் விந்தன் எழுதிய 'பாலும் பாவையும்' நாவல் மிகுந்த வரவேற்பையும், அதே அளவுக்கு விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தவர் மகாகவி பாரதியார். பிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் இந்திய தொழிலாளர்கள் பட்ட சிரமங்களைக் கேள்வியுற்று கவி பாடியவர் பாரதி. தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற புதிய ரஷியா உருவானபோது அதை வரவேற்றும் கவி பாடினார். அதேபோன்று விந்தனும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கையை எழுதினார். எழுத்தாளராக அறியப்பட்ட பின்னரும், தன்னை ஒரு தொழிலாளி என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமை என்று கூறினார்.
இந்நூலில் புதுமைப்பித்தன், அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் உள்ளிட்டோர் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. உழைப்பாளி வர்க்கத்திலிருந்து விடிவெள்ளி போலத் தோன்றி புரட்சி படைத்த விந்தனை முழுமையாக அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...