சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதே வானம் அதே பூமி

நூலகங்கள், இல்லங்களில் இருக்க வேண்டிய சிறப்பான நூல்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 9:18 am

DIN

அதே வானம் அதே பூமி - சுப.சோமசுந்தரம்; பக்.178; ரூ.200; காவ்யா, சென்னை-77; ✆ 044-23726882.

திருநெல்வேலியைச் சேர்ந்த கணிதப் பேராசிரியரான நூலாசிரியர் சமூகப் பிரச்னைகளை மையப்படுத்தி எழுதி பெரிதும் வரவேற்பைப் பெற்ற, 'என் வானம் என் பூமி' நூலைத் தொடர்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.

இவர் தனது வாழ்வில் கிடைத்த அனுபவங்களையே தொகுத்துள்ளார். அவரது சமூகப் பார்வையும், இலக்கியப் பார்வையும் நூலை வாசிக்கும்போது தெரிகிறது. அரசியல், பண்பாடு, இலக்கியம், சமூகம், பொருளாதாரம் சார்ந்த 25 கட்டுரைகளும் சிறப்பு. குட்டிக் கதைகளும் உள்ளன.

அவற்றில் சில நூலாசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களே என்றாலும் படிக்கப் படிக்க சுவாரசியமாக இருப்பதோடு, புத்தம்புது தகவல்களை அளிக்கிறது. வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளைக் கடந்து போவதற்கான தைரியத்தைத் தருகிறது.

'கவலையில்லா மனிதன்' என்ற கட்டுரையில் அடுத்த வீட்டுக்காரரைப் பற்றியும், தனது மனைவியின் கோபம் குறித்தும், பதவி உயர்வு கிடைக்காதது பற்றியும் கவலைப்படாமல் வாழும் ரெங்கசாமியை, அக்கம்பக்கத்தார் ரசித்து மகிழ்வது சித்தரிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தனித்து வாழ்வோர் மத்தியில் அடுத்த வீட்டுக்காரரின் நடவடிக்கைகளைப் பார்த்து ரசித்து மகிழும் சுற்றத்தாரும் நட்பும் குறித்த கட்டுரை வியக்க வைக்கிறது. இது இன்றைய தலைமுறையினர் ரசித்து வாசிக்க வேண்டிய ஒன்று. இது போன்று குட்டிக் குட்டி கதைகள் ஏராளம்.

இவற்றுக்குப் பொருத்தமாக நூலில் திருக்குறள், தேவாரம், திருவாசகம், நற்றிணை போன்ற நூல்களின் முக்கிய வரிகளைச் சேர்த்திருப்பது மெருகூட்டுகிறது. 'நேரம் கிடைத்தால் வாசியுங்கள்' என்கிறார் நூலாசிரியர். ஆனால், வாசிக்கும்போதே ஒரே மூச்சில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், மறுவாசிப்புக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலையையும் இந்நூல் ஏற்படுத்துகிறது. நூலகங்கள், இல்லங்களில் இருக்க வேண்டிய சிறப்பான நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.