சாமானியத் தலைவர் காமராஜர்- ஜெகாதா; பக்.125; ரூ.150; சத்யா என்டர்பிரைசர்ஸ், சென்னை-94; ✆ 90805 29504.
தமிழ்நாடு முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்த காமராஜர் சாமானியருக்காகவே வாழ்ந்தார். தேச விடுதலைக்காகப் பாடுபட்டதோடு சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் உயர்வுக்காகப் பெரிதும் செயலாற்றியவர், தலைநிமிர்ந்த தமிழ்நாட்டைக் காண விரும்பி தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர், வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மல் என்று அவரது அளப்பரிய செயல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவருடைய வாழ்க்கை குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்திருந்தாலும், இந்த நூல் புதுமையான தகவல்களோடு சிறப்புற்று விளங்குகிறது.
'ஆங்கிலேயே அரசி எலிசபெத், எகிப்து அதிபர் நாசர், யூகோஸ்லாவியா அதிபர் மார்ஷல் டிட்டோ, பாகிஸ்தான் அதிபர் புட்டோ போன்ற வெளிநாட்டுத் தலைவர்கள் காமராஜரின் ஆட்சித் திறன்களைப் பாராட்டியது', '1965-இல் காமராஜரை தன் தலைவர் என எம்ஜிஆர் புகழ்ந்து திமுகவில் ஏற்பட்ட சலசலப்பும், அதனால் எம்ஜிஆர் அளித்த விளக்கத்தை அண்ணா பெருந்தன்மையோடு ஏற்றது', 'இரு பிரதமர்களைத் தேர்வு செய்தது' என்று எண்ணற்ற தகவல்கள் நிறைந்த களஞ்சியமாகவே இருக்கிறது. காமராஜரின் வாழ்க்கை வரலாறு என்பதுடன், 1950 முதல் 1980 வரையிலான தேசிய, மாநில அரசியலின் முக்கிய நிகழ்வுகளையும் இந்த நூல் எடுத்துரைப்பது சிறப்பு.
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி, சத்தியமூர்த்தி, இந்திரா காந்தி, பெரியார் ஈ.வெ.ரா. கக்கன், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடனான முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. காமராஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்என்று சில வரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.