டாக்டர் முத்துலட்சுமி-லீலாவதி யுவராசன்; பக்:112; விலை ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், 1, பி.ஏ.என். ராஜரத்தினம் சாலை, 3-ஆவது சந்து, வண்ணாரப்பேட்டை, சென்னை 21, ✆ 93805 30884.
சமுதாயத்தின் குறைகளைக் கண்டு அவற்றையெல்லாம் களையும் பொருட்டு தனது வாழ்க்கையை பெண்கள் விடுதலைக்காக அர்ப்பணித்த சாதனைப் பெண்மணி யார் என்றால் நம் கண்முன்னே தெரிபவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. அவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் நூலாக இது படைக்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை பகுதியில் 1886 -ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30-ஆம் தேதி பிறந்தவர் முத்துலட்சுமி. பல போராட்டங்களைக் கடந்து தனது இருபதாவது வயதில் அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஆணாதிக்க சமுதாயத்தில் அவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் கடந்தே அவர் மருத்துவராக முடிந்தது.
தனது கொள்கைக்காக தனது திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த மருத்துவர் முத்துலட்சுமி, தன்னுடைய கொள்கைக்கும் மக்கள் பணிக்கும் எந்தத் தடையும் செய்ய மாட்டேன் என்று வாக்குறுதி தந்த சுந்தர ரெட்டியை மணந்து கொண்டார்.
முன்னேற்றம் காண வாய்ப்புகளே இல்லாத சமுதாயத்தில் பிறந்து, பெண்கள் விடுதலைக்காக தளராமல் பாடுபட்ட போராளி மருத்துவர் முத்துலட்சுமி; தேவதாசி முறையை ஒழிக்க அவர் ஆற்றிய அரும்பணி, பெண் குழந்தைகளுக்கு இளம்வயது திருமணத்தைத் தடுக்க நடத்திய போராட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தியது என்று அவரது போராட்டக்களங்கள் சமுதாய சிந்தனை, பெண்களுக்கான உரிமையைப் பெற அவர் ஆற்றிய பணி, அர்ப்பணிப்பு என பல அம்சங்கள் கொண்டவை. அனைவரும் படித்தறிய வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.