சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

எரிதழல் பாரதி

இளம் தலைமுறைக்கு பாரதியை அறிய வைக்கும் சிறந்த முயற்சி.

News image
Updated On :3 மார்ச் 2025, 1:43 pm

DIN

எரிதழல் பாரதி- டி.வி.ராதாகிருஷ்ணன்; பக். 252; ரூ.280; புஸ்தகா, பெங்களூரு-76; ✆ 91-7418555884.

மகாகவி பாரதி குறித்த ஒவ்வொரு நூலுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில், பாரதியின் படைப்புகள் குறித்த திறனாய்வுகள், பாரதியின் அரிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக வெளியாகியுள்ள இந்நூலும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்நூலில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது பாரதியின் புதிய ஆத்திசூடி வரிகளுக்கான விளக்கங்கள். ஒளவையார் எழுதிய ஆத்திசூடியின் தாக்கத்தில், காலத்திற்கேற்ற முறையில் புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்காக புதிய ஆத்திசூடியை படைத்தார் பாரதியார். புதிய ஆத்திசூடியை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கம் தந்துள்ளார் நூலாசிரியர்.

'ஊண் மிக விரும்பு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகளுக்குப் பொருள் அளவுக்கு மீறி சாப்பிட வேண்டும் என்பதல்ல. நன்றாக, நல்ல உணவாக சாப்பிட வேண்டும் என்பதுதான். இது நூலாசிரியரின் எளிமையான விளக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

குழந்தைகளுக்காக பாரதி, அடிமைத்தனத்தை வெறுத்த பாரதி, சிட்டுக்குருவியும் பாரதியும், வேடிக்கை மனிதர்கள் என பாரதியின் படைப்புகள் குறித்த பல கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 'மெல்லத் தமிழினிச் சாகும்' என பாரதி உண்மையில் உரைத்தாரா? அவ்வாறு உரைத்ததற்கான காரணம் என்ன என்று விளக்கும் ஒரு கட்டுரை, மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்ன பேதையை பாரதி ரௌத்திரம் கொண்டு 'கடிந்து' பாடிய பாடல் எனத் தெளிவுபடுத்துகிறது.

புனர் ஜன்மம், அமிர்தம் தேடுதல், வாசக ஞானம், மூடபக்தி, இனி என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தலைப்புகளில் பாரதி எழுதிய அரிய கட்டுரைகள் நூலுக்கு சுவை கூட்டுகின்றன. இளம் தலைமுறைக்கு பாரதியை அறிய வைக்கும் சிறந்த முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.