சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாண்டியர் கல்லணை

தமிழர்களின் தொழில்நுட்ப வரலாற்றையும், நீரியல் மேலாண்மையையும் அறிய விரும்புவோருக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.

News image
Updated On :3 மார்ச் 2025, 1:59 pm

DIN

பாண்டியர் கல்லணை- சி.அ.வ.இளஞ் செழியன்; பக்.290; ரூ.340; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 99404 46650.

கரிகால் வளவனின் கல்லணை மட்டுமே தமிழர்களின் நீர் மேலாண்மைக்கான சான்றாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பாண்டியர்களின் நீரியல் மேலாண்மை குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர்.

அதன் பலனாக 'பராக்கிரம பாண்டியன் கல்லணை' எனும் பாண்டியரின் நீரியல் மேலாண்மையை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

பாண்டியர் காலத்தில் வாய்க்கால் வெட்ட ஒதுக்கப்படும் நிலங்கள், அதற்கான வழிமுறைகளை கல்வெட்டு ஆதாரங்களுடன் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் கட்டிய கல்லணைகள் நீரைப் பிரிக்கும் வகையிலும், பாண்டியரின் கல்லணை நீரைத் தடுக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இது வைகையின் இயல்பிற்கேற்ப கட்டப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

அந்தவகையில் கரிகால் வளவனின் கல்லணையில் உள்ள அணையியல் பொறியியல் மற்றும் நீரியல் மேலாண்மைத் தொழில்நுட்பத்தையும், பாண்டியர்களின் தடுப்பணைகள், மதகுகள் மூலம் சிறு கால்வாய்களைக் கையாண்டது குறித்தும் இந்நூல் பேசுகிறது. இதுவரை ஓரளவே எழுதப்பட்டுள்ள பாண்டியர் வரலாற்றுக்கு இந்த ஆய்வு மேலும் வலுசேர்த்துள்ளது.

இடைக்கால பாண்டியர் காலத்தில் நீரியல் மேலாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுமான வழிமுறைகள் மற்றும் தற்போது நீரியல் மேலாண்மை அடைந்துள்ள மாற்றங்களைப் பதிவு செய்ய நூலாசிரியர் தவறவில்லை. பிற்குறிப்பில் சங்ககாலப் பாடலில் இடம்பெற்றுள்ள நீரியல் தொழில்நுட்பங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.