பச்சைப் புறா
வெள்ளைக் காளானுக்குப் பதிலாக மரக்காளான்களையே உணவாகப் பயன்படுத்தியதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

பச்சைப் புறா - கோ.நடராசன்; பக்.136; ரூ.150; மின்னங்காடி பப்ளிகேஷன்ஸ், சென்னை-50; ✆ 72992 41264.
இளமைக் காலத்தில் நீலகிரி மலையில் வாழ்ந்த நூலாசிரியர், சேலம் ஆத்தூரில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். என்றாலும், தனது இளமைக்கால வாழ்வின் நிகழ்வுகளை அவரால் மறக்க முடியவில்லை. அந்த நினைவுகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
மலையிடுக்கில் இருக்கக் கூடிய சிறிய பள்ளத்தாக்கு சமவெளி ஆடு குறித்த அவருடைய பதிவுகள் அந்தப் பகுதியில் உள்ள சகதிப் புதைகுழியில் மாட்டிக் கொண்ட ஆடுகளைப் பற்றியும் மாடுகளைப் பற்றியும் கூறுகின்றன.
மெட்டோரை பகுதியில் நடப்பட்ட கற்பூர மரக் கன்றுகள், அரையாள் அளவுக்கு வளர்ந்த மலைத் தும்பைச் செடிகள், அங்கிருந்த முனிப்பாறை, வேறு சில சிறுபாறைகளைப் பற்றியெல்லாம் கூறும் நூலாசிரியர், இப்போது அங்கே மரங்கள் வெட்டப்பட்டு தேயிலைத் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதையும், எல்லா குப்பைகளும் அங்கே கொட்டப்படுவதையும் கவலையுடன் சொல்கிறார்.
மழை பெய்யும் காலத்தில் காளான்கள் முளைப்பதையும் அதை உணவாக மக்கள் உட்கொண்டதையும், மலைவாழ் தொல்குடிகளான தோடர்கள் வெள்ளைக் காளானுக்குப் பதிலாக மரக்காளான்களையே உணவாகப் பயன்படுத்தியதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. முப்பது வகை காளான்கள் அப்போது இருந்திருக்கின்றன.
நீலகிரி மலைப்பகுதியில் விளையும் உருளைக் கிழங்குக்கு மேட்டுப்பாளையத்தில் தனி மண்டிகள் செயல்படுவது, கோஸ் பயிரிடுவதில் உள்ள சிரமங்கள், அதிலுள்ள வகைகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அங்குள்ள தைல மரங்கள், இனிப்பு பட்டாணி, கீரை வகைகள், தண்ணீர் காய் ஆகியவை நீலகிரியின் அன்றைய சூழலை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...