விக்கிரமாதித்தன் கதைகள்
செறிந்த எழுத்து நடையில் அனைவருக்குமான நூலாக வந்துள்ளது இந்த விக்கிரமாதித்தன் கதைகள்.

விக்கிரமாதித்தன் கதைகள்; உமா சம்பத்; பக்.174; ரூ.220; கிழக்கு பதிப்பகம்; ராயப்பேட்டை; சென்னை-600 014; ✆044 - 42009603.
விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் பன்னெடுங்காலமாக இந்திய பாரம்பரியத்தில் இரண்டறக் கலந்தவை. பல மொழிகளில் பல தலைமுறைகளாக கூறப்பட்டு வருபவை.
அவற்றை சம காலத் தலைமுறையினருக்கு கையளிக்கும் வகையில் எளிமையான எழுத்தாக்கத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கதையையும் புதிர்வடிவில் கூறும் வேதாளத்தின் சாதுரியமும், விடைகளை அவிழ்க்கும் விக்கிரமாதித்தனின் விவேகமும் இக்கால இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிதிறன் கலை.
அந்த வகையில் இந்நூலில் 23 தலைப்பிலான கதைகள் வாசகர்களை ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. கதைக்குள் கதை என்ற வடிவில் விக்கிரமாதித்தன் - வேதாளம் என்ற இரு மையப் பாத்திரங்களுக்குள்ளே நிகழும் உரையாடலாய் அவை அமைக்கப்பட்டுள்ளன. பிரபாவதியும்... மூன்று இளைஞர்களும், மூன்று சகோதரர்களின் கதை, பத்ரகாளிக்கு பலி, கிளிகள் சொன்ன கதைகள் உள்ளிட்ட பல கதைகள் அதன் பழைமை மாறாமல் புதிய கோணத்தில் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பு.
வெறுமனே நெறி கூறும் நோக்கில் அல்லாமல், சிந்தனைத் தூண்டலுக்கு வித்திடும் வகையில் அக்கதைகள் இருப்பதுதான் விக்கிரமாதித்தன் காலம் கடந்து நிற்பதற்குக் காரணம். அக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான முயற்சியாக, செறிந்த எழுத்து நடையில் அனைவருக்குமான நூலாக வந்துள்ளது இந்த விக்கிரமாதித்தன் கதைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...