ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழர் நாடு

அவசியம் படித்தறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றாவண நூல்கள் இவை.

News image
Updated On :24 மார்ச் 2025, 7:49 am

DIN

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.- இன் தமிழர் நாடு (இரண்டு பாகங்கள்) - தொகுப்பு - பதிப்பாசிரியர்: கோ. வீரமணி; பக்.1318; ரூ.1,400; காவ்யா, சென்னை-24; ✆ 044 -2372 6882.

திராவிட இயக்க நோக்கிலான அரசியலிலிருந்து விலகி, தமிழ்த் தேசிய சிந்தனைகளை முன்னெடுக்கும் விதமாகத் தமிழர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கிய அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம், 1947-இல் தமிழர் நாடு என்ற வார இதழையும் தொடங்கினார். ஓராண்டில் நிறுத்தப்பட்ட இதழ் மீண்டும், 1949, ஆகஸ்ட் முதல் மாத இதழாக இரு ஆண்டுகள் வெளிவந்தது.

இவ்விரு ஆண்டுகளில் வெளிவந்த 24 இதழ்களில் தமிழர் நாடு இதழில் இடம் பெற்றிருந்த விஷயங்கள் அனைத்தும் கி.ஆ.பெ.வி.யின் மகள்வழிப் பேரன் கோ. வீரமணியின் முயற்சியால் தொகுக்கப்பட்டு இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

தலையங்கம், செய்திகள், மொழி - இன அரசியல் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் என்று தனித்தனித் தலைப்புகளில் பிரித்து தொகுப்புகளின் பொருள்களை வகைப்படுத்தியுள்ளார்.

முதல் தலையங்கத்திலேயே, 'தமிழ்நாடு இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் தமிழ் மக்களிற் பலருக்குத் தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்ற உணர்ச்சி போதுமான அளவிற்கு இன்னும் உண்டாகவில்லை' என்று கூறுகிறார். தலையங்கங்கள் பெரும்பாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பனவற்றைச் சுற்றியே மிகக் கூரானவையாக இருக்கின்றன.

செய்திகளிலும்கூட, தன்னுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ள கி.ஆ.பெ.வி., திமுக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அன்றே குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியார் ஈ.வெ.ரா.வையும் திராவிடர் கழகத்தையும் கடுமையாக விமர்சித்து 'எவனெழுதினாலென்ன' என்ற புனைபெயரில் எழுதப்பட்ட கட்டுரைகள் வந்திருக்கின்றன.

தமிழ்நாடு அரசியலில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் இரு தரப்பினருமே அவசியம் படித்தறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றாவண நூல்கள் இவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.