பாடிப்பறந்த பகுத்தறிவுக் குயில்
சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பாடிப் பறந்த குயிலாக இருந்த உடுமலை நாராயண கவியின் சுவைமிக்க வரலாறு இந்நூல்.

பாடிப்பறந்த பகுத்தறிவுக் குயில் - உடுமலை அமிர்தநேயன்; பக்.208; ரூ.270; மோகனா பதிப்பகம், உடுமலை; ✆ 9425 30850.
சிறுவயதில் பெற்றோரை இழந்து, நான்காவது வகுப்பு வரை படித்த நாராயண கவி, பெரும்புலவர் முத்துசாமி கவிராயரிடம் மாணவனாக இருந்து தமிழ் கற்றிருக்கிறார்; சங்கரதாஸ் சுவாமிகளிடம் யாப்பிலக்கணமும், நாடகக் கலையையும் பயின்றிருக்கிறார். அந்த பின்னணியில்தான் 1933 - ஆம் ஆண்டில் கிருஷ்ண லீலா தொடங்கி 1972 - இல் வெளிவந்த ஆதிபராசக்தி திரைப்படம் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை உடுமலை நாராயண கவியால் எழுத முடிந்திருக்கிறது.
பி.யு.சின்னப்பா நடித்த திரைப்படம் என்றால் உடுமலை நாராயணகவி பாடல்கள் எழுதுவார் என்று இருந்த அந்தக் காலத்தில், மூன்று நிமிட பாடலுக்கு மூவாயிரம் ரூபாயும், ஆறு நிமிடப் பாடலுக்கு ஆறாயிரம் ரூபாயும் பெற்றிருக்கிறார்.
1946- இல் வெளிவந்த வித்யாபதி படத்துக்குப் 'ஆடு ராட்டே சுழன்றாடு ராட்டே சுகவாழ்வு வந்ததென்று ஆடுராட்டே' என பாடல் எழுதிய தேசிய மனப்பான்மை கொண்ட உடுமலை நாராயண கவி, அதன் பின்னர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டவர்களின் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது பகுத்தறிவு சிந்தனையுடன் கூடிய சீர்திருத்தப் பாடல்களை எழுதியிருக்கிறார்.
'கிந்தனார் காலட்சேபம்' என்ற இசை நாடகத்தை உடுமலை நாராயண கவி எழுதியிருக்கிறார். அதை மேடையில் நிகழ்த்தியவர் என்.எஸ்.கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...