பாண்டிய நாட்டுப் பிரதானிகள்-மு. பாலகிருஷ்ணன், பக்.288; ரூ. 300; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.
மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் அரச நிர்வாகத்தைக் கவனிக்க முதல் மந்திரி, சேனாதிபதி ஆகிய இரு பதவிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பிரதானி என்ற பதவியில் இருந்த மூவரைப் பற்றிய விரிவான வரலாறு நூலாக்கப்பட்டிருக்கிறது.
மதுரையை ஆளுநராக விசுவநாத நாயக்கர் ஆண்டபோது தளவாயாகவும் பிரதானியாகவும் இருந்து, 72 பாளையங்களை உருவாக்கி நிர்வாக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர் அரியநாத முதலியார். காஞ்சி அருகே பிறந்த அரியநாயகம் எவ்வாறு கிருஷ்ணதேவ ராயருக்கு அணுக்கமாகிறார்; மதுரைக்கு விசுவநாத நாயக்கருடன் தளவாயாக ஆளச் செல்கிறார் என்பது விளக்கப்படுவதுடன், திருப்பணிகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
சிவகங்கைச் சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத் தேவர், அவர் மகன் முத்துவடுகநாதத் தேவர், ராணி வேலு நாச்சியார் ஆட்சிக் காலங்களில் தளவாய் - பிரதானியாக இருந்தவர் தாண்டவராய பிள்ளை. சிவங்கைச் சீமை உருவான வரலாற்றுடன், கர்ணபரம்பரைக் கதையும் தரப்பட்டிருக்கிறது.
சசிவர்ணத் தேவருடன் மட்டுமின்றி, தொடர்ந்து அவர் வாரிசுகளிடமும் பிரதானியாக இருந்த தாண்டவராய பிள்ளை, மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு சந்தா சாகிபால் நேரிட்ட பிரச்சினைகளைக் கையாண்ட விதம், தஞ்சை படையெடுப்பு, காளையார்கோவில் படையெடுப்பு, வேலுநாச்சியார் பாதுகாப்பு என வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நிறைவில் ஒவ்வொரு பிரதானி பற்றியும் எழுதுவதற்குப் பயன்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டிருப்பது, வாசகர்கள் தொடர்புடைய விஷயங்களை மேலும் தேடிப் படிக்க உதவியாக இருக்கும். நல்ல அறிமுகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.