தகைசால் தமிழ்த் தொண்டர்கள் (தொகுதி-1)

இதில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலங்களில் இணையத்தில் எழுதப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தகைசால் தமிழ்த் தொண்டர்கள் (தொகுதி-1)
Updated on
1 min read

தகைசால் தமிழ்த் தொண்டர்கள் (தொகுதி-1), முனைவர் மு.இளங்கோவன்; பக்.328; ரூ.350; வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, அரியலூர் மாவட்டம் - 612 901. ✆ 94420 29053.

'தகைசால் தமிழ்த் தொண்டர்கள்' என்ற தலைப்பிலான இந்த நூல் 42 தமிழறிஞர்களின் வாழ்வையும், பணிகளையும் சிறிய அளவில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலங்களில் இணையத்தில் எழுதப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொல்காப்பிய அறிஞர் கு.சுந்தரமூர்த்தி குறித்த கட்டுரையில், தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஆராய்ச்சி முன்னுரை, விளக்கவுரையுடன் பதிப்பித்து, தமிழுக்காற்றிய தொண்டு, தமிழில் சைவ சமயத் தத்துவத்தை விளக்கும் 14 சாத்திர நூல்களுக்கும் உரை எழுதிய பெருமை கு.சுந்தரமூர்த்தியைச் சாரும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர் ஆ.சிவலிங்கனார். பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். வாழ்நாள் முழுவதும் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிகளுக்காகவே ஈடுபட்டவர்.

தமிழுக்கும் சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தவத்திரு முத்துக்குமாரசுவாமி தம்பிரான் அடிகளார், தமிழ் நூல்கள் தொடர்ந்து வெளிவர தொண்டாற்றியும் தமிழறிஞர்களைப் பாராட்டியும் தமிழ்க் கல்லூரியைத் திறம்பட நடத்தியும் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

அறிவாலும் ஆற்றலாலும் உயர் பதவிகளாலும் சிறப்புற்ற அறிஞர்கள், வறுமையில் உழன்ற புலவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்ட அறிஞர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இசைவாணர்கள் பலரின் விவரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com