ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை (நோபல் உரைகள்)

ஆல்பெர் காம்யு, ஸால் பெல்லோ, ஓரான் பாமுக் உள்ளிட்ட எழுத்தாளர்களும், கவிஞர் சீமஸ் ஹீனியும் ஆற்றிய நோபல் உரைகள் இடம்பெற்றுள்ளன.
ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை (நோபல் உரைகள்)
Updated on
1 min read

ஆல்பெர் காம்யுவிலிருந்து ஹான் காங் வரை (நோபல் உரைகள்)-ஸிந்துஜா; பக்.256; ரூ.250; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-600 017, ✆ 97910 71218.

ஆல்பெர் காம்யு, ஸால் பெல்லோ, ஓரான் பாமுக் உள்ளிட்ட எழுத்தாளர்களும், கவிஞர் சீமஸ் ஹீனியும் ஆற்றிய நோபல் உரைகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் பல்வேறு காலகட்டங்களில் நோபல் பரிசு பெற்றவர்கள்.

இலக்கியம் மனித குலத்தின் மதிப்புமிக்க சேமநிதி என்பதை, அதைத் தேடிக் கண்டறியும்போது உணர்கிறோம் என்று தனது உரையில் ஓரான் பாமுக் தெரிவித்துள்ளார். புத்தகங்களைக் கொளுத்துவது, எழுத்தாளர்களைச் சிறுமைப் படுத்துவது ஆகியவை மூலம் ஓர் இருண்ட, எதிர்காலம் குறித்த அக்கறையில்லாத சூழல் நம் மீது திணிக்கப்படுகிறது என்பது அவரின் கருத்து. அந்த உரையில் தனது தந்தையைப் பற்றி குறிப்பிட்டுள்ள பாமுக், தனது தந்தையிடம் 1,500 புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்ததாக தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு படைப்பாளி சரித்திரத்தை ஏற்படுத்தியவர்களின் பின்னின்று சேவை செய்ய வேண்டியவரல்லர்; மற்றவர்களின் துன்பத்தில் பங்குகொள்ள வேண்டியவர் என்பது ஆல்பெர் காம்யுவின் வாக்கு. சௌஹான் என்னும் இந்தியர்கள் குறித்து தெரியாதவர்களுக்கு அவர்களை வி.எஸ்.நைபால் அறிமுகம் செய்துள்ளார்.

ஹான் காங்குக்கு எழுந்த 2 கேள்விகள் உலகம் இருக்கும் வரை, பெரும்பாலானோருக்குப் பதில் இல்லாத கேள்விகளாகவே இருக்கும். 'உன்னைச் சுற்றி எல்லோரும் அழும்போது நீ அழவேண்டிய தேவையில்லை. போலியாக சிந்தப்படும் கண்ணீருக்கு முன்னால் நீ அழாமல் இருப்பது மேன்மைக்குரியது' என்று மோ யான் கூறியுள்ளது சிறந்த அறிவுரையாக எப்போதும் நினைவில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com