அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சமயப் பரல்கள்

அறம் போதிக்கும் பக்தியை தமிழ் போதித்து பரப்பிய ஒவ்வொன்றையும் மாலைகளாகக் கோத்து சமயப் பரல்களாக தந்துள்ளார் நூலாசிரியர்.

News image
Updated On :7 ஜூலை 2026, 3:50 pm IST

சமயப் பரல்கள்- முனைவர் தி. நெல்லையப்பன்; பக். 176; ரூ. 270; பல்லவி பதிப்பகம், ஈரோடு-638 153, ✆ 94422 51549.

இயல், இசை, நாடகம் எனும் மூன்று வகையிலும் தனது நெடும் பயணத்தை ஆளுமையுடன் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ் தெய்வ மொழி. இந்த மூன்று விதமான தமிழையும் பக்தி இலக்கியங்களில் நிச்சயம் காணலாம் என்பதை வகைப்படுத்தி காட்டுகிறார் நூலாசிரியர்.

எல்லா சமயங்களும் ஒரே கருத்தைத்தான் போதிக்கின்றன என்றாலும், அந்தந்த நிலத்தைச் சார்ந்த மக்களின் மொழிகள் வழியாகத்தான் அவை விரிந்து பரவும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழிலும் பல இலக்கியங்களை பல சமய சான்றோர்கள் படைத்துள்ளனர். நீலகண்டபிள்ளை தேவசகாயம் ஆனதை "திருத்தொண்டர் காப்பியம்' என்று தலைப்பிட்டு 4,135 பாடல்களைப் பாடியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம் என பல்லாயிரக்கணக்கான பாடல்கள் இயலாகவும், சமயப் பெரியவர்களான நால்வர், பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர் உள்ளிட்டோர் இசையாகவும், புராண இதிகாச சம்பவங்களை நாடக வடிவாகவும் இறைவனை அடையும் பாதையை சான்றோர்கள் வகுத்துக் கொண்டனர்.

வள்ளலாரின் திருவருட்பாவில் வெண்பாக்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டில் கதைப் பாடல்களாகவும், வைணவ இலக்கியங்கள் கடல் தாண்டிய கதைகளாகவும் சென்று தமிழ் வழி சமயப் பரப்புரை நடந்தேறிய வரலாறும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறம் போதிக்கும் பக்தியை தமிழ் போதித்து பரப்பிய ஒவ்வொன்றையும் மாலைகளாகக் கோத்து சமயப் பரல்களாக தந்துள்ளார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.