தமிழர் கூத்தும் பண்பாட்டு மரபும் - கோ. கருணாகரன்; பக். 216; ரூ. 250; பரிசல் புத்தக நிலையம், சென்னை- 600 075. ✆ 93828 53646.
பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழகத்தின் கூத்து, நாடகயியல் பற்றிய உணர்வுபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
முத்தமிழில் மூன்றாவதான நாடகத் தமிழ், நிகழ்த்து கலையாக மதிக்கப்பட்டதே தவிர, அது படித்து உவக்கும் இலக்கிய மரபாக ஏற்கப்படவில்லை என சான்றுகளுடன் நூலாசிரியர் கூறுகிறார்.
தொல்காப்பியம் காலந்தொட்டு அறியப்பட்டு வந்த ஆடல் கலைக்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் நாடகம் என்பது ஆட்டத்துடன் கதை சொல்லுதலாக இருந்துள்ளது. இது தவிர நடனத்துக்குப் பல வடிவங்களும் வரலாறுகளும் ஏற்பட்டன.
இன்றைய பரதநாட்டியத்துக்கும் காப்பிய மாதவியின் நாட்டியத்துக்கும் வேறுபாடு உண்டு. நாட்டிய சாஸ்திரம் இயற்றிய பரத முனிவருடன் பரத நாட்டியத்தை தொடர்புபடுத்தி தேவையற்ற சர்ச்சையை சிலர் ஏற்படுத்தியதில் இன்றைய பரதத்தின் சரியான சரித்திரம் மறைக்கப்படுகிறது. இடைக்காலத்தில் தஞ்சை நால்வரின் பங்களிப்பு இன்றைய பரத நடன வடிவத்துக்கு முக்கியமானதாகும்.
அரசவையில் நிகழ்த்தப்பட்ட கலையாகத் திகழ்ந்த ஆடல் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டு, கோயில் கலையானது. இருபதாம் நூற்றாண்டில் பரதநாட்டியம் எனப் பெயரிடப்பட்டு கோயிலுக்கு வெளியே நடத்தும் நிகழ்த்து கலையாகி, நடுத்தர, உயர்தர வகுப்பினர் இடையே ஏற்புடையதானது என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இருக்க முடியாது.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூத்து, நாடகம், நாட்டியம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் ஒரே கருத்து திரும்பத் திரும்ப வருவதும் பல்வேறு கண்ணோட்டங்கள் தொகுக்கப்பட்டு முடிவான கருத்தின்றி வருவதும் வரலாற்று மயக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்துகிறது.
வரலாற்று ஆய்வு நூல் என்பதை விட, பண்டைய தமிழக ஆடல் கலைகள் குறித்த தகவல்களின் களஞ்சியம் என்னும் வகையில் கூடுதல் சுவாரஸ்யம் உள்ள நூலாக இது அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனங்கவரும் மலையாள சினிமா

மண்ணும் மக்களும்

பத்துப்பாட்டு பொருள் விளக்கம்

தமிழர் பண்பாட்டில் தாமரை
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



